தொடரும் மணல் திருட்டை தடுக்க கோரி கடிதம்- சிபிஎம்

25.07.2008

பெறுநர்: உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
புதுச்சேரி அரசு ,
புதுச்சேரி.

ஐயா!

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் திருட்டு நடந்துகொண்டுள்ளது தாங்கள் அறிந்ததே. தாங்கள் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் கூட கடுமையான நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்து உள்ளீர்கள் . எப்படி முடிவு செய்தாலும் மணல் திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது. நேற்று இரவு 10.00 மணியளவில் செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் பாலமுருகன் (TN-31-H-1557)என்ற லாரியில் மணல் திருடப்பட்டதை பொதுமக்களே பிடித்து திருக்கனூர் காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த லாரியை பிடித்து கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் லாரி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த லாரி மீது எந்த வழக்கும் பதிவு செய்யபடவில்லை.. நேற்றைய முன்தினம் கூட தாசில்தார் அவர்களால் வில்லியனூரில் பிடிபட்ட 5 லாரிகளில் மேற்சொன்ன பாலமுருகன் லாரி பிடிபட்டு எந்த வழக்கும் இல்லாமல் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட மணல் திருட்டை பிடிக்க செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றிற்கு சென்ற தமிழக தாசில்தார் மேற்படி பாலமுருகன் லாரி உரிமையாளரால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. அது சம்மந்தமான அந்த லாரி உரிமையாளர் மீது வழக்கு உள்ளது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டது மேற்சொன்ன அதே பாலமுருகன் லாரியின் உரிமையாளர் மோகனசுந்தரம் ஆகும்.

எனவே, தொடர்ச்சியாக மணல் திருட்டிலும் , தடுக்க வரும் அதிகாரிகளை தாக்குதலிலும் சம்மந்தப்பட்டுள்ள பாலமுருகன் என்ற லாரியையும், அதன் உரிமையாளர் மோகனசுந்தரத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

இங்ஙனம்

(V.பெருமாள்;)
செயலாளர்

Leave a Reply