14.07.2004
பத்திரிக்கை செய்தி
கல்வித்துறையின் இயக்குனர் திரு.தேவநிதிதாஸ் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் தீய சக்திகளை நம்பி போராட்டத்தில் ஈடுபடாதீர்கள், எல்லா வசதிகளையும் புதுவை கல்வித்துறை செய்து கொடுத்துள்ளது என்று ஒரு பொய்யான பித்தலாட்டத்தனமான ஒரு செய்தியை வெளியிட்டதோடு மாணவர் இயக்கங்களை தீய சக்திகளாக சித்தரிக்கக்கூடிய வேலையையும் தனது கையாலாகாத தனத்தை மூடிமறைப்பதற்கான முயற்சியும் செய்துள்ளார்.
அவருடைய தான்தோன்றித்தனமான பத்திரிக்கை அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசசெயற்குழு வண்மையாக கண்டிக்கிறது. மேலும் தீய சக்தி என்ற வார்த்தையை அவர் வாபஸ் வாங்க வேண்டுமென்றும் இல்லையெனில் பலகட்ட போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கின்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதைச்சார்ந்த வர்க்க வெகுஜென அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மத்தியில் ஆட்சிப்பொருப்பேற்றுள்ள ஐக்கிய முன்னணி அரசு குறைந்;தபட்ச பொதுசெயல்திட்டத்தில் முன்வைத்த கோரிக்கை தொழிலாளர் நலம், கல்வி, பொதுத்துறை, விவசாயம் நிலச்சீர்திருத்தம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்ற உழைப்பாளி மக்களுக்கு தலைமையேற்கக்கூடிய இடதுசாரிக்கட்சிகள் பலஆண்டுகளாக போராடி வந்த கோரிக்கைகளை முன்வைத்தது. அதிலும் கல்வி கடைச்சரக்காக வியாபாரமாவதையும், ஆரம்பக்கல்விமுதல் ஐ.டி.ஐ போன்ற கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும் பாதுகாப்பதற்கும் கோரிக்கை வைத்தவர்கள் மார்க்சிஸ்டுகளும் மாணவர் இயக்கங்களும். நாங்கள் முன்வைத்த கோரிக்கை பலதும் ஏற்றுக்கொண்ட மத்திய அரசு கல்வியில் அதிக கவனம் செலுத்த அதிக நிதி ஒதுக்கி உள்ளது. குறிப்பாக 500 ஐ.டி.ஐ களை உடனே திறந்து திறம்பட நடத்த இந்த நிதி ஆண்டில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது திரு.தேவநிதிதாஸ் அவர்களுக்கு புரிந்திருக்க நியாயமில்லை. வரலாறு தெரியாதவர், பத்திரிக்கை படித்து மத்திய பட்ஜெட்டில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள நேரமில்லாதவர்.உண்மையிலேயே அவர் படித்து அல்லது செய்தி பார்த்து தெரிந்திருந்தால் இது மாணவர்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம், லத்தி சார்ஜ், பலகட்ட போராட்டங்களுக்குப்பிறகு கிடைத்தது என்பது தெரிந்திருக்கும். தீய சக்திகள் என்று கூறியிருக்க மாட்டார்.
புதுவையில் 424 அரசு பள்ளிகள் 5000 ஆசிரியர்களை கொண்டு 1 லட்சத்தி 50,000 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி இந்த நடப்பு ஆண்டில் 150 கோடி ஆகும். ஆனால் 2002-2003 கல்வி ஆண்டைவிட 2003-04 கல்வி ஆண்டில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாகும். இதற்கு காரணம் மாணவர்களா, பெற்றோர்களா? அல்லது நிதி இருந்தும் தேர்ச்சி விகிதம் குறைவிற்கு காரணம் ஆசிரியர் பற்றாக்குறை, இருக்கக்கூடிய ஒரு பகுதி ஆசிரியர்களை முறையாக வேலை வாங்கத்தவரிய குணக்கேடு, மாணவ மாணவிகள் ஒதுங்குவதற்கு கழிப்பிட வசதி, சுத்தமான குடிநீா,; காலத்தோடு பாடப்புத்தகம் கொடுக்கத்தவறியது. இவைகள் அனைத்தும் யாருடைய குற்றங்கள்?. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கக்கூடிய இயக்குனர் தேவநிதிதாஸ் மற்றும் புதுவை ஆட்சியாளர்கள் போன்ற தீய சக்திகளின் கையில் மாட்டிக்கொண்டிருப்பதுதான் காரணம் என்று தோன்றுகிறது.
உதாரணம் புதுவையில் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகள் அதிகமான கட்டண வசூல், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, குறைந்த சம்பளம் இவற்றை கண்டுகொள்ளாததும், எந்த நடவடிக்கை எடுக்காததும் தீய நோக்கம் கொண்டதாகும்(அந்த கல்விக்கூடங்கள்தான் 100ஃ100 சதம் தரத்தை உயர்த்தி உள்ளது. இதற்கு ஆட்சியாளர்களும், நிர்வாகத்துறையில் உள்ளவர்களும் கையூட்டு பெற்றுக்கொண்டு அரசு பள்ளிகளின் மதிப்பை குறைத்து தனியார் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி காட்டுகின்ற நடவடிக்கையாகும். புதுச்சேரி காங்கிரஸ் அரசு தனியார் கல்வி நிறுவனங்கள் துவங்க தாராளமாக ஏராளமான அனுமதிகளை வழங்கி உள்ளது. மேலும் தனியார் கல்வி நிறுவனங்களை கொழுக்கவைத்திட அரசு கல்வியை சீரழிக்கும் முயற்சியாக ஆசிரியர் பற்றாக்குறையை போக்க மறுப்பது, நூலக வசதி, சோதனை கூட மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை செய்யமறுப்பதாகும். அரசின் இந்த நடவடிக்கை மாணவர்கள் பெற்றோர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அரசின் வன்முறை நடவடிக்கையாகும்.
புதுவை அரசு பள்ளிகளில்; உள்ள குறைகளை சுட்டிக்காட்டி தன்னெழுச்சியாக போராட்டங்கள் வெடிக்கிற போது மாணவர் இயக்கங்கள் தலையிடுவதும், பேசி தீர்ப்பதும் இந்த தேசத்தின் அடிப்படை உரிமையாகும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மாணவர்களைப்பற்றி சிந்திக்காமல் குறைகளை கலைவதற்கு முயற்சி செய்யாமல், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் பாடப்புத்தகம் காலத்தோடு கொடுக்காமல் ஆசிரியர் பற்றாக்குறையை போக்காமல் இருப்பது மாணவர்கள் பற்றியும், பெற்றோர்கள் பற்றியும் கவலைப்படுவதுபோல நெறியற்ற முறையில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
போராடுவது, உரிமைகளை பெறுவது நல்ல மாணவர்களை உருவாக்குவதற்காண அடித்தளத்தை உருவாக்குவதற்கு உங்களைப்போன்ற தீய சக்திகளிடமிருந்து நல்ல மாணவர்களை உருவாக்குவதற்கு போராட்டம் தேவை அது மாணவர்களின் உரிமை அதுதான் நாட்டின் சுதந்திரத்தையும் விடுதலையையும் வாங்கித்தந்தது. தேவநிதிதாசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இவண்
(தா.முருகன்)
செயலாளர்