ஆசிரியர் தின அடையாளத்தை சிதைப்பதை நிறுத்துக -மார்க்சிஸ்ட் கட்சி

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.  இந்தாண்டு ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் பெயரில் கொண்டாடவும், அனைத்து மாணவர்களுக்கும் பிரதமரின் உரையை ஒலிப்பரப்பிட மத்திய மனித வளத்துறை மூலம் கட்டயாப்படுத்தப்படுகிறது. இது மநில் அரசுகளின் உரிமையை பறிப்பதோடு, ஜனநாயகத்தை பறிப்பதும் ஆசிரியர் தினத்தின் அடையாத்தை சிதைப்பதுமாகும். நாட்டின் பிரதருக்கு உள்ளய உரிமையை எதிர்க்கவில்லை. மாறாக கட்டாயப்படுத்துதலையும், ஆசிரியர் தின அடையாளத்தை சிதைப்பதையுமே மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.
பிரதமர் மோடி டெல்லியில் மாணவர்களிடையே உரையாட உள்ளதை நாடு முழுவதும் அனைத்துப் பள்ளி மாணவர்களும் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. இதற்கு பல மாநில அரசுகளும், மக்களும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். ஆனால் புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளிலும் பிரதமரின் பேச்சை ஒலிபரப்ப புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை கட்டாய உத்தரவை பள்ளி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் ஒலிபரப்பு செய்ய அனைத்து வசதிகளைச் செய்யவும், மின்தடை ஏற்பட்டாலும் ஜெனெரேட்டர் வசதிகளை ஏற்படுத்தவும் அதற்கான செலவை SSA திட்ட நிதியை கொண்டு பயன்படுத்திக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளிலும் ஒலிப்பரப்பிட தனியார் பள்ளி நிர்வாகங்களுடன் கலந்தாலோசனை கூட்டமும் நடைப்பெற்றுள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.
சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது, ஹிந்தி மொழி திணிப்பு, ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்ற பெயரில் கொண்டாடுவது என்ற தனது சித்தாந்த திணிப்பை பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கு மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு துணைபோவது ஏற்புடையதல்ல.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, தேவையான சோதனைக்கூடம், விளையாட்டு மைதானம், கழிப்பறை, குடிநீர் வசதி போன்ற பல அடிப்படை கட்டமைப்பு குறைபாடுகள் பரவலாக உள்ளன. இந்த குறைபாடுகளுக்கு இடையே அரசுப் பள்ளி மாணவர்களின் கடின உழைப்பு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தனியார் பள்ளிகளுக்கு ஈடுசோடாக தேர்ச்சி பெறுகிறார்கள். கல்வி வணிகமயமாக்கப்பட்டு உறவுகளை காசுபணமாக சிறுமைப்படுத்தி உள்ள சூழலில் ஆசிரியர், மாணவர்களின் நட்புறவை மேம்படுத்திடவும், ஆசிரியர் தினத்தை சுதந்திரமாக கொண்டாடவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இவண்
வெ. பெருமாள்
பிரதேச செயலாளர்

Leave a Reply