மத்திய அரசே புதுச்சேரி மின்சார விநியோகத்தை தனியாரிடம் விடாதே… புதுச்சேரி அரசே மின் துறையை அரசு துறையாக பாதுகாத்திடு…
அனைத்துப் பகுதி மக்களும் வெகுண்டு எழுந்து போராட வாரீர்..
கடந்த 12 ஆம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே ஏற்கனவே சீரழித்து உள்ள பொருளாதாரம், கரோன ஊரடங்கால்
முடங்கிப் போயுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடியில் சுயசர்பு பொருளாதாரம் என்று சில திட்டங்களை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.
நாட்டு மக்களும் மிக ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல புதிய திட்டங்களை அறிவித்து வண்ணம் உள்ளார். நிதி நிலை அறிக்கை மேலே பொது பட்ஜெட்டை போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகள் கரோனவின் ஆல் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து ஏழை-எளிய மக்கள் சிறு குறு நடுத்தர தொழில்கள், விவசாயிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இவர்களுக்கான மீட்பு உதவி நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிபோட்டது மட்டும் இல்லாமல் வழக்கமாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகளையும் மானிய உதவிகளையும், வரி வழங்கியுள்ள தன் மூலம் இந்த அரசு ஏழை எளியோருக்கு காண அரசிற்கு
மாறாக கார்ப்பரேட் களுக்கான அரசு என்பதை நிரூபித்துள்ளது.
நேற்றைய அறிவிப்பில் நிலக்கரி சுரங்கங்களில் கனிம வளங்களை மேலும் 6 விமான நிலையங்களை அணுசக்தித் துறை இணை யூனியன் பிரதேசங்களின் மின் வினியோகத்தை தனியார்மய படுத்துவது என்றும் ராணுவ தளவாட உற்பத்தியில் தற்போதுள்ள 49 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை 74 விழுக்காடு வரை அனுமதிப்பது போன்ற அறிவிப்புகள் கரோன நோய்த்தொற்று பாதிப்பில் மக்கள் அல்லல் படுகின்ற நேரத்தில் தீவிரப்படுத்தியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
குறிப்பாக மின்சார விநியோகத்தை யூனியன் பிரதேசங்களில் தனியாரிடம் தாரை வார்ப்பது என்பது நம் புதுச்சேரி மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும். ஏற்கனவே மின்சார சட்டம் 2003 மூலம் புதுச்சேரியின் மின்சாரத்தை தனியார்மயம் படுத்துவதற்கான முன்னோட்டமாக கார்ப்பரேஷன் ஆக ஆக்குவதற்கான முயற்சிகள் நடந்தபோது மின் பொறியாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் கடுமையான போராட்டங்களின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.
மின்சார (திருத்தச்)சட்டம் 2020ன்
மூலம் விவசாயிகள் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின்சாரம் ரத்து, மாநில அரசின் மானியம் ரத்து, கட்டணம் நினைக்கின்ற உரிமை தனியாருக்கு விடுவது, மின்சாரம் பொதுப் பட்டியலிருந்து மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்வது போன்ற மாநில அரசின் உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளும் நடைபெற உள்ள சூழ்நிலையில் இந்த நடவடிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் மின்சாரம் தனியார் மயமாக்குவது என்ற கொள்கை தோல்வி அடைந்துள்ள நிலையில், பல நாடுகளிலும் நமது நாட்டின் சில மாநிலங்களிலும் கூட தனியாரிடமிருந்து அரசு துறையாக மாற்றப்படவேண்டும் என்று விவாதிக்க படுகின்ற சூழ்நிலையில் இந்த நடவடிக்கை தேவையா?.
புயல் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மின் வினியோகத்தை மறுசீரமைக் கின்ற பணிகளில் அரசு துறையாக இருக்கின்ற இடங்களில் புதுச்சேரி உட்பட உடனுக்குடன் போர்கால அடிப்படையில் நடந்ததையும், தனியார் இருக்கின்ற இடங்களில் இது எங்களின் வேலை அல்ல இதற்கு தனியாக நிதி தர வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததையும், மின் வினியோகம் சீர் செய்யப்பட 2,3 ஆண்டுகள் கூட ஆனதை ஒரிசா போன்ற மாநிலங்களில் கண்கூடாக கண்டோம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் மின் வினியோகம் ஜூஸ் கோ என்ற தனியார் நிறுவனத்திடம் உள்ளது. அது வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தராமல் தனியார் கம்பெனிகளுக்கு மட்டும் விநியோகம் செய்கிறது. ஒப்பந்தப்படி மாவட்டம் முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய வில்லை. அதனால் தற்போது வேறு வழியின்றி வீடுகளுக்கான மின் விநியோகித்திணை அரசே மேற்கொண்டுள்ளது. லாபம் மட்டுமே குறிக்கோளாக உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சமூகத்தின் மீதும் மக்கள் மீதும் எப்படி அக்கறை கொள்வார்கள் என்பது இது உதாரணம்.
ஆகவே புதுச்சேரி மாநிலத்தின் மின் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவினை கைவிடுமாறு மத்திய அரசினை வற்புறுத்துவதொடு
புதுச்சேரி மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி பங்கு, 7வது ஊதிய குழு அமலாக்க நிதி, 15வது நிதிக்குழு ஒதுக்கீடு உள்ளிட்ட பாக்கிகளை வழங்குவதோடு, புதுச்சேரி மாநிலத்தின் கரோன நோய் பாதிப்பு தடுப்பு மற்றும் சிகிச்சையையும் பொருளாதார மீட்புக்காகவும் பேரிடர் நிவாரண நிதி மற்றும் புதுச்சேரி கோரியுள்ள ரூ. 990 கோடி ஆகியவற்றினை வழங்குமாறு வற்புறுத்துகிறோம்.
புதுச்சேரி மாநில அரசு, மத்திய அரசின் மின்சார வினியோகம் தனியாரிடம் விடக்கூடிய நடவடிக்கையினை ஏற்றுக் கொள்ளாமல் புதுச்சேரி மாநில மக்களின் நலன் கருதி மின்துறை ஆகவே நீடிக்க செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
புதுச்சேரி மாநில அனைத்து அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், வர்த்தகர்கள் ,தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், ஆசிரியர் அமைப்புகள் என
அனைத்து பகுதி மக்களும் மத்திய அரசின் மக்கள் விரோத மின் வினியோகத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடி மின் துறையை அரசு துறையாக பாதுகாக்க முன்வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச குழு அழைக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்திகள் > பிரதேச செயற்குழு > அனைத்துப் பகுதி மக்களும் வெகுண்டு எழுந்து போராட வாரீர்
அனைத்துப் பகுதி மக்களும் வெகுண்டு எழுந்து போராட வாரீர்
posted on