பத்திரிகை செய்தி
புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை புதுச்சேரி அரசு உடனே நிறுத்த வேண்டும்.
ஒன்றிய மின்துறை அமைச்சர் திரு. ஆர்.கே. சிங் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு செவ்வாய்கிழமை அன்று அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், தற்போதுள்ள எந்தவொரு அரசுக்கு சொந்தமான மின் விநியோக உரிமதாரரையும் தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவை முந்தையதைப் போலவே செயல்படும் என்றும் எந்தவொரு அரசு சொத்து அல்லது நெட்வொர்க்கின் உரிமையையும் (மின் விநியோகம்) மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் கூறி உள்ளார். ( Written reply to the House, Singh stated that there is no proposal for privatisation of any existing state-owned distribution licensee and they shall continue to function as earlier. There is no proposal to change ownership of any asset or network (of power distribution).)
ஒன்றிய அரசே எந்த ஒரு மாநில மின் விநியோகத்துறையும் தனியார்மயமாக்க போவது இல்லை என்று அறிவித்துள்ள நிலையில் புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் பிஜேபி கூட்டணி அரசு உடனடியாக புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
முப்பது ஆயிரம் கோடி ரூபாய் புதுச்சேரி மக்களின் சொத்தை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு ஏஜெண்ட் வேலை செய்ய கூடாது. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக பல்வேறு பொய்களை நீதிமன்றத்தில் தெரிவித்து எப்படியாவது மின்துறையை விற்க வேண்டும் என்று செயல்படும் தலைமைச் செயலாளர், மின்துறை செயலர் மற்றும் சில மின்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
இரா.ராஜாங்கம்
மாநில செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்திகள் > பிரதேச செயற்குழு > ஊடக அறிக்கை Press release > மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை புதுச்சேரி அரசு உடனே நிறுத்த வேண்டும்.
மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை புதுச்சேரி அரசு உடனே நிறுத்த வேண்டும்.
posted on