புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவி விலக வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி
பத்திரிக்கை செய்தி.
——————————-

புதுச்சேரி தொழில்நுட்ப
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் திரு. சிவராஜ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது .


புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சிவராஜ் ருசா ஒருங்கிணைப்பாளர், சென்டாக் ஒருங்கிணைப்பாளர், மாநிலத் திட்ட இயக்குனரகத்தின் ஒருங்கிணைப்பாளர். என பல்வேறு பொறுப்புகள் ஒரு நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி பதவியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார், துவக்க விசாரணையில் பதிவாளர் சிவராஜ் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை உள்ளதாகவும், உண்மையாகவும் இருக்கக் கூடும் என தெரிகிறது என்று புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தரின் 21.10.2022 தேதியிட்ட தற்கால பணி நீக்க ஆணை குறிப்பிடுகிறது. மேலும் அவரைப் பற்றி பொது அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மேலும் பல புகார்கள் வந்துள்ளன.

இந்த வழக்கு முடியும் வரை புதுச்சேரியைவிட்டு அவர் வெளியூர்களுக்கு செல்லக்கூடாது என்றும் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊழலில் திளைக்கும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதை போன்று மக்களை நம்ப வைக்க கண்துடைப்பிற்காக சில நேரங்களில் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது .ஆனால் ஊழல் குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படுவது இல்லை. அரசு மற்றும்அதிகார வர்க்க த்தின் மட்டத்தில் இவர்களுக்கு உள்ள நெருக்கமான தொடர்பின் காரணமாக புனிதர்களாக மாறிவிடுகின்றனர்.


புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர் பிரச்சினையிலும் கடுமையான நடவடிக்கைகள் இருக்குமா ? என்பது கேள்விக்குறியே !
துணைநிலை ஆளுநரின் உத்தரவின் பேரில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பதிவாளர் முனைவர் சிவராஜ் மீதான நடவடிக்கை 3 மணி நேரத்தில் திரும்பப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?.

ஆளுநரின் இத்தகைய நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவருக்கும், ஆளுநருக்கு உள்ள தொடர்பு என்ன என்ற கேள்வியும் எழுகிறது !

ஆகவே என் .ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு இது பற்றிய உண்மை விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும்பாரதிய ஜனதா கட்சி சார்பாக கடந்த வாரம் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான நடைமுறை உத்திகள் சம்பந்தமாக நடைபெற்ற இணைய வழி கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் பங்கேற்றது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சட்ட மாண்புகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய பொறுப்பு துணை நிலை ஆளுநர் Tamilisai Soundararajan பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக செயல்படுவது இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

ஜனநாயகத்தின் மீதும் இந்திய அரசியலமைப்பு மீதும் ஆளுநருக்கு சிறிதளவும் அக்கறை இல்லை என்பதைத்தான் அவரின் செயல்பாடுகள் வெளிப்படுத்துகிறது.

மேலும் புதுச்சேரி மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு சட்ட ஜனநாயக மாண்புகளை அழித்து வருவதோடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர் சிவராஜ் ருசா விவகாரத்தில் துணைநிலை ஆளுநரின் அதீத தலையிடு இனியும் அவர் பதவியில் நீடிப்பது சரியல்ல எனவே உடனடியாக பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) புதுச்சேரி மாநில குழு வலியுறுத்துகிறது. மேலும் பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசையின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு இந்திய ஜனாதிபதி அவர்களுக்கு விரிவான புகாரை கட்சி வழங்க உள்ளது.


இப்படிக்கு

இரா. இராஜாங்கம், மாநில செயலாளர் சிபிஐ எம்

Leave a Reply