தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு மாநாடு (வடமுகத்து திருமண மண்டபம் , கொசக்கடை வீதி) ஆகஸ்ட் 8. 2008ல் நடைபெற்றது இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. நில சீர்திருத்த சட்டத்தை அமுலாக்கி நிலமற்ற தலித் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வழங்க கோரும் தீர்மானம்.
உழுபவனுக்கே நிலம் சொந்தம் நிலமற்ற விவசாய தொழிலாளிக்கு நிலம் போன்ற கோஷங்கள் சுதந்திர போராட்டத்தின் போது தோன்றியவை ஆனால் சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் ஆன பிறகும் அக்கோஷங்களை வலிமையுடன் எழுப்ப வேண்டிய சூழலிலேயே நாம் உள்ளோம்.
1950 களில் நில உச்சவரம்பு சட்டம் கொண்டுவந்தபோது 20 ஏக்கர் உச்சவரம்பாக நிர்ணியிக்கப்பட்டது. அதன்படி 350 லட்சம் ஹெக்டேர் நிலம் வினியோகத்திற்கு கிடைக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று வரை 51.9 லட்சம் ஏக்கர் நிலமே விநியோகிக்கபட்டிருக்கிறது. இதில் பயனுற்றவர்கள் 50 லட்சத்தி 33 ஆயிர்த்தி 310 பேர்களே ஆகும். பினாமி மூலம் நிலத்தை ஆக்கிரமிப்ப செய்து வைத்துவிடுவதாலும் பினாமிபேரில் பட்டா வழங்குவதாலும் நாடு முழுக்க நிலக்கிழார் நிலச்சுவான்தார் என்கிற ஜமின்தார் காலத்து சமூக அமைப்புகளை ஒழிக்க முடியவில்லை. இதனால் நேரடியாக கிராமப்புற சமூக உறவுகளிலும் எந்ந விதமான உருப்படியான மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை. இன்று ஏற்பட்டிருக்கும் மிகக்குறைந்த முன்னேற்றம் என்பது உழைக்கும் மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களில் பலனே ஆகும்.
இப்பின்னணியில் நாட்டின் மக்கள் தொகையின் 19 சதவீதமாக இருக்கும் தலித் உழைப்பாளி மக்களின் வரலாறு என்பது கொடுமையான ஒடுக்குதல், சுரண்டப்படுதல்;;, ஒதுக்கப்படுதல் ஆன வரலாறே ஆகும். சமூக ரீதியாக தாழ்த்படுத்துதல், கலாச்சார ரீதியாக ஒடுக்கப்படுதல் அரசியல் ரீதியாக அதிகாரம் பெறாமல் தடுப்பது பொருளாதார ரீதியாக சுரண்டப்பட்டு வந்தவர்களாகவே தலித் ;மக்கள் உள்ளனர்;.
நாட்டில் உள்ள மொத்த தலித் மக்கள் தொகையில் 5ல் 4பேர் கிராமப்புறங்களில் வசிப்பவர்களாகவே உள்ளனர். இதில் பெரும்பாலானோர் நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளர்கள் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாய கூலித் தொழிலாளர்களில் 40 சதம் பேர் தலித் ஆவார்கள்.
மொத்த உற்பத்தியில் பெரும் உழைக்கும் சக்தியாக விளங்கும் தலித் உழைப்பாளி சமூகத்திற்கு நிலத்தின் மீதான உறவு திட்டமிட்டு ஆதிக்க சக்திகளால் துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சீர்திருத்தம் என்பது 1990 வரை வெறும் கணக்கு காட்டும் விசயமாகவும் ஓட்டு வாங்கும் தந்திரமாகவும் இருந்து வந்தது. 90களில் புதிய பொருளாதார கொள்கைகள் அமுல்படுத்த ஆரம்பித்தபின் பல மாநில அரசுகள் வெட்ட வெளிச்சமாக நில உச்சவரம்ப சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தும் குத்தகை சட்டத்தை மாற்றியும் விவசாய கூலி தொழிலாளர்களில் மிச்சமிருந்து நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போட்டனர்.
விவசாய உற்பத்தி நிலங்களையும் உபரி நிலங்களையும் பெரு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் வாங்க சட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது நாட்டில் இதுவரை நடந்து வந்த நிலச்சீர்ததிருத்த முயற்சிக்கு கிடைத்த பெரும் பின்னடைவாகும். புதுவையிலும் இத்தகைய நில உச்சவரம்பு சட்டம். மாற்றப்பட்டள்ளது என அறிகிறோம். ஒருபுறம் சிறிதளவு நிலம் கிடைத்தும் அரசின் மற்ற வசதிகள் கிடைக்காததால் நிலம் பறிபோய் உள்ளது. நிலச்சுவாந்தார்களால் வன்முறையாக நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. நிலம் கிடைத்தும் நிலத்தை இழந்து விவசாயி கூலி தொழிலாளி ஆகி இன்று அதற்கும் கேடாக நிற்கையில் அரசு தனியார்மயம் தாராளமயம் உலகமய கொள்கைகளால் விவசாயத்தை பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்த்து வருகிறது. இது தலித் உழைப்பாளி வர்க்கத்திற்கு நேரடியாக அநீதி இழைப்பதாகும்.
• எனவே தலித் மக்களை புறந்தள்ளும் போக்குகளை மாற்ற தரிசு, புறம்போக்கு நிலங்களை கணக்கிட்டு நிலச்சீர்திருத்த சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
• நில மேம்பாடு, நீர், விவசாய கடன் வசதி அளித்தல் உத்திரவாதம் செய்யப்பட வேண்டும்.
• கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான நிலத்தில் தலித் மக்கள் தொகைக்கு ஏற் நிலக்குத்தகை வழங்க வேண்டும்.
• குத்தகை விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றுவதின் மீது தடை விதிக்க வேண்டும்.
• நியாயமான குத்தகை நிர்ணயிக்க வேண்டும்.
• உபரி நிலங்கள் தொடர்பான வழக்குகளை காலம் கடத்தாமல் விரைந்து முடித்து தலித் மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும்.
• அரசுப் புறம் போக்குகளில் குடியிருக்கும் இடத்திற்கு பட்டாவும், வீடற்ற மக்களுக்கு மனைப் பட்டாவும், நகரப் பகுதியில் குடியிருப்போருக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரவேண்டும்.
• தலித் விவசாய கூலி தொழிலாளர்கள் வசம் உள்ள ரெவின்யூ நிலங்களுக்கு அவர்களுக்கே பட்டா வழங்க வேண்டும்.
• நிலச்சீர்த்ததற்திற்கு எதிரான அரசின் தனியார்மய கொள்கையை கைவிட வேண்டும்.
• இதுவரை நிலச்சீர்த்திருத்தத்தின் கீழ் அரசால் கணக்கிடப்பட்ட நிலம் பஞ்சமி நிலம் விநியோகிக்கப்பட்ட நிலம் பயன்பெற்ற விபரம் ஆகியவை கொண்ட வெள்ளை அறிக்கையினை வெளியிட வேண்டும் எனவும் இம்மாநாடு புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறது.
இடதுசாரிகள் ஆளுகின்ற மேற்குவங்கம் திரிபுரா, கேரளாவில் நிலச்சீர்திருத்த சட்டம் மூலம் தலித் மக்களுக்கு உரிய நிலம் வினியோகம் செய்யப்பட்டது போல புதுச்ேசுரி அரசம் தலித் மக்களுக்கு நில விநியோகம் செய்திட வேண்டும்.
2. சிறப்பு கூறுகள் திட்ட (அட்டவணை இனத்தவர் துணைத்திட்டம்) நிதியினையும், நலத்திட்டங்களையும் முழுமையாக அமுல்படுத்திடக்கோரி தீர்மானம்
பல்வேறு ஐந்தாண்டுத் திட்டங்களுக்குப் பிறகும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவான பிறகும் தலித் மக்களின் சமூக நிலை பெரிதும் மாறவில்லை இதனால் மத்திய அரசின் மூலம் சிறப்புக் கூறுகள் திட்டம் 1980 காலத்தில் உருவானது. தற்போது அது அட்டவணை இனத்தவர் துணைத்திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி மாநில அரசு திட்ட ஓதுக்கீட்டில் அம்மாநிலத்தின் அட்டவனை இன மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் எத்தனை சதவீதம் உள்ளனரோ அத்தனை சதவீதம் நிதி தலித் மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு நிதியினை ஒதுக்க வேண்டும் அவ்வாறு கடந்த காலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க மற்றும் காங்கிரஸ், அ.தி.மு.க ஆட்சி காலத்தில் உரிய நிதி ஒதுக்கவும் இல்லை. ஒதுக்கிய நிதியை முறையாக செலவிடவும் இல்லை.
கடந்த 1980 முதல் 2007-2008 வரையிலான 28 ஆண்டுகளில் புதுச்சேரி மாநில்த்தில் மொத்த திட்ட ஒதுக்கீடு 7889.37 கோடி. இதில் சிறப்புக் கூறு திட்ட நிதியாக ஒதுக்கியிருக்க வேண்டிய தொகை ரூ1277.39 கோடி. 28 ஆண்டு காலத்தில் ரூ 1277.39 கோடி ஒதுக்கப்படவில்லை.
ஜனநாயக அமைப்புகளும், சில தலித் அமைப்புகளும் தொடர்ச்சியாக போராடியதின் விளைவாக சமீப ஆண்டுகளில் 16.25 அடிப்படையில் தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு ஓதுக்கீடு செய்யப்படும் தொகை முழுமையாக தலித் மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்தபடாமல் வேறு பொதுவான திட்டங்களுக்கு இத்தொகையினை மடைமாற்றிவிடும் போக்கும் அல்லது செலவு செய்யப்படாமல் திருப்பி விடப்படும் போக்கும் இன்றைக்கும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டின் மத்திய அரசு ஒதுக்கீடு ரூ 1750 கோடி. இதில் சிறப்புக்கூறுகள் திட்ட நிதி 284.37 கோடி. ஆனால் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை ரூ 183 கோடி மட்டுமே. இது தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்
எனவே புதுச்சேரி அரசு சிறப்புக் கூறுகள் திட்ட நிதியினை 16.25மூ சரியாக ஒதுக்கியும், புதுப்பிக்கப்பட்ட நிதியை முழுமையாக தலித் மக்கள் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு முழுமையாக செலவிட்டு;ம், தலித்துகளுக்கு இதர சமூக நலத்திட்டங்களை அமுலாக்கிடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்ணனி அமைப்பு மாநாடு அரசை வலியுறுத்துகிறது. மேலும் இத்திட்டம் இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பில் இருப்பதை மாற்ற வேண்டும். சுமார் 300 கோடி ஆய்வுக்கான திட்டத்தை ஒரு துறையோடு சேர்ப்பது திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்த உதவாது எனவே அட்டவணை இனத்தவர் உதவித் திட்டத்திற்கென்று தனியாக ஒரு துறை ஏற்படுத்தி செயல்படுத்த வேண்டும் எனவும், அதைசில தலித் மற்றும் ஜனநாயக அமைப்பினை உருவாக்கிட கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்திடவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
3. அறிவு பரவலாக்குவதற்கான தேசிய ஆணையத்தின் (National Knowledge commission) இடஓதுக்கீடு குறித்த மாற்று பார்வை முன்மொழிவை திரும்பப்பெறுக
கல்வியில், வேலைவாய்ப்பில் நிலவுகிற இடஓதுக்கீடு முறைக்கெதிரான சமூகநீதியை மறுக்கிற கருத்துதளம் விரிவடைந்து வருகிறது. நீதிமன்றத்தை இடஓதுக்கீட்டிற்கு எதிராக அணுகும்போக்கும், உருவாகிவருகிறது.
மேல்தட்டு அறிவு உலகத்தினர் மத்தியில், நிர்வாகத்தின் மத்தியில், கொள்கை அமுலாக்கும் மட்டத்தில், உயர்நிறுவன நிர்வாகங்கள் மத்தியில், இந்திய முதலாளித்துவ கழகங்கள் மத்தியில் இடஓதுக்கீட்டிற்கான எதிர்ப்பு நேரடியாக மறைமுகமாக தரம் பேணுதல் திறன் அளவு கோல் என்று பல வாதங்கள் மூலமாக எழுவதை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சமீபமாக இடஒதுக்கீட்டு எதிர்ப்பு அலைக்கு வலுசேர்க்கும் விதமாக அறிவு பரவலாக்களுக்கான தேசிய ஆணையம் உயர்கல்வி சம்பந்தமான பரிந்துரைகளை சொல்லும் சாக்கில் இடஒதுக்கீட்டிற்கு ஒட்டுமொத்தமாக சமாதிகட்ட பெரும் பள்ளத்தை தோண்டியுள்ளது. அறிவாளிகளால் நிரம்பிய இந்த ஆணையம் சாதியவாரியான இடஒதுக்கீட்டை தொடராமல் அந்த இடத்தில் வாய்ப்பிழந்தவர்கள் குறியீடு என்ற முறையில் பல தரப்பினருக்கும் கல்வி வாய்ப்பை பங்கு போடுதல் என்ற அபாயகரமான பரிந்துரையை முன்வைத்துள்ளது.
தேசிய அறிவுசார் ஆணையம் சொல்லும் “ Deprived Index ” என்பதில் கிராமப்புறத்திலிருந்து வெகுதூரம் படிக்க வருபவர்கள்;. பெண்கள், வருமான குறைந்த குடும்பத்தினர் என்று பெரிய பட்டியல் இருக்கிறது.
இவர்களுக்கெல்லாம் கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒட்டுமொத்த கல்வி இடங்களை அதிகரிப்பதற்கு பதில் இடஒதுக்கீடு செய்யப்பட்;ட இடத்தை தாரை வார்ப்பதை எப்படி நாம் அனுமதிக்க முடியும்?
உலகமயம் விளைவாக தனியார்மயமும் தாராளமயமும் இந்திய பொருளாதார தளத்தில் விஸ்வரூபம் எடுத்ததின் விளைவாக பொதுத்துறையில் நிலவிய இடஓதுக்கீடு பெரும்பலனை அளிப்பதாக இல்லை.
உலகமயம், தனியார்மயம், தாராளமய போக்கிற்கு வலுவான எதிர்ப்பு போராட்டங்களை ஒருபக்கம் நடத்தினோம் மறுபக்கம் சமூகநீதியில் அக்கறை உள்ளவர்கள் அனைவரும் தனியார் பெருநிறுவனங்களிலும், தனியார் தொழிலகங்களிலும் இவ்வேலைவாய்ப்பில் இடஓதுக்கீடு வேண்டும் என்று உரிமைகுரல் எழுப்பினோம். இது மாறியுள்ள பொருளாதார சூழலில் எழுந்த கோரிக்கை
எங்கே இந்த கோரிக்கைகளுக்கு, அரசு சட்டவடிவம் கொடுத்து விடுமோ என்ற அச்சத்தில், பெரு முதலாளிகள்; தோட்டகலை பராமரிப்பு, ஹவுஸ்கீப்பிங் போன்ற பணிகளில் இடஓதுக்கீடு தருகிறோம் என்று முதலில் சொன்னார்கள். பின்பு தரம், திறன் பற்றி பேசி நிறுவன உற்பத்தி வினியோக தளங்களில் இடஒதுக்கீடு சாத்தியமில்லை என்று மறுத்தது. மறுபக்கம்; திறன், தரத்தை தாழ்த்தப்பட்ட பகுதி மாணவர்களிடம் வளர்க்க சிறப்பு பயிற்ச்சி வழங்கும் திட்டத்திற்கு நிதி உதவி அளிக்கிறோம் என்றார்கள். ஒதுக்கீடு பற்றியெல்லாம் பின்பு பேசலாம் என்று ஒடி ஓளிந்தார்கள். ஆனால் தனியார் நிறுவனங்களில் இடஓதுக்கீடு ஏன் அவசியம் என்று அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஜனநாயக இயக்கங்கள் தேசிய விவாதத்தை மையப்படுத்தவே அரண்டு போனது முதலாளி வர்க்கம்.
இந்திய முதலாளிகள் கழகம் இதுபற்றி நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை வழங்க இந்நிலையில் தங்கள் கமிட்டியை நியமித்தது. இந்த கமிட்டி நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்கள் ஆண்டறிக்கையில் (Annual Report) எவ்வளவு இடங்களை தாழ்த்தப்பட்ட பிரிவினரால் நிரம்பியுள்ளது என்ற விவரத்தை தாமாகவே முன்வந்து வெளியிடலாம் என்ற பசப்பு பரிந்துரையை வழங்கி தங்கள் உறுப்பினர் நிறுவனங்களை பின்பற்றச் சொன்னது. இதற்கும் மக்களிடம் எதிர்ப்பு வந்தது, ஆனால் வெறும் 25, 30 நிறுவனங்களே தங்கள் கழக் குழுவின் பரிந்துரையை பின்பற்றி தங்கள் ஆண்டறிக்கையில் இந்த விவரத்தை மட்டுமே வெளியிட்டது.
அனைத்து துறையிலும் அதிவேக தனியார்மயம் வந்துள்ள சூழலில் தேசிய அறிவுசார் ஆணையத்தின் சமூக நீதிக்கெதிரான கருத்தை நிராகரித்து தனியார்துறையில் இடஒதுக்கீடு குறித்து தேசிய கருத்தை உருவாக்கி இதன் அமுலாக்கத்திற்கு வழிமுறை காண வேண்டும்.
புதுவையில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் உள்ளுர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என ஜனநாயக இயக்கங்கள் குரல் கொடுத்தன. இதன் விளைவாக புதுச்சேரி அரசு 2005 ல் தனியார் தொழிற்சாலைகளில் 60மூ புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வழங்கவும், அதற்காக குறைந்தபட்ச கூலித் தொகையில் ஒரு பகுதியை அரசு வழங்கும் என்ற முறையில் அரசாணை வெளியிடப்பட்டது.
அரசின் இத்தகைய அறிவிப்பு உரிய பலனை அளிக்கவில்லை. மேலும் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய இடஓதுக்கீடும் வழங்கப்படவில்லை. ஆகவே, புதுச்சேரி அரசு தனியார் தொழிற்சாலைகளில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவும். இடஓதுக்கீடு அளிக்கவும் அரசு உரிய பொறுத்தமான நடவடிக்கை எடுக்க இம்மாநாடு வலியுறுத்துகிறது.
உலகமயமும், தனியார்மயமும், தாராளமயமும் இந்திய பொருளாதாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இடஓதுக்கீட்டிற்கு எதிரான கருத்துருவாக்கம் உருவாகின்ற நிலையில் இதற்கு எதிராகவும் பொதுத்துறையில், தனியார்துறையில் இடஓதுக்கீட்டு கொள்கைக்காக போராட முன்வரவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களையும் இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
4. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கறாராக அமலாக்கக்கோரி தீர்மானம்.
நமது நாட்டில் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதோ தீண்டாமையை கடைபிடிப்பதோ தனடனைக்குறிய குற்றம் என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் நாடுவிடுதலை அடைந்து 61 ஆண்டுகள் கடந்த பின்னரும் அரசியல் சட்டத்தை அங்கீகரித்து 58 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட இன்று வரையிலும் தீண்டாமை நீடிக்கிறது.தீண்டாமை தடுப்பு சட்டம் 1955 ஆம் ஆண்டுக்குப்பின்னர் சில திருத்தங்களுடன் குடியுரிமை பாதுகாப்பு சட்டம் 1976 லும் கொண்டுவரப்பட்டது.; நாடு முழுவதும் தலித் மக்களிடம் சமூக விழிப்புணர்வு ஏற்படும் போதெல்லாம் ஆதிக்க சாதிவெறியர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து வெறியாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்;. அந்த வன்முறைகளை தடுக்க இருக்ககின்ற சட்டங்கள் போதுமானதாக இல்லை என்பதால் தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 மற்றும் அதன் விதிகள் 1995 ல் கொண்டுவரப்பட்டது.
வன்கொடுமை தடுப்பு சட்டம் அதன்விதிகளும் புதுவை மாநிலத்தில் சரிவர அமுல்படுத்தப்படாததால் வன்கொடுமைகளுக்கு பலியான அல்லது பாதிக்கப்பட்ட தலித்களுக்கு உரிய நிவாரணமோ நீதியோ பாதுகாப்போ கிடைக்கவில்லை. குற்றவாளிகளும் தண்டிக்ப்படுவதில்லை.
புதுச்சேரிகாவல் துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்யவேண்டிய வழக்குகளை சாதாரணவழக்குகளாக பதிவு செய்வது.பதிவு செய்யப்படுகிற வழக்குகளைக்கூட சரிவர புலன்விசாரணை நடத்தாதது வழக்குகளின் சாட்சியங்களை தயார்படுத்தாமல் வேண்டுமென்றே ஏனோதானோ என்று இருக்கின்ற நிலை நீடிக்கின்றது. இதனால் பல வழக்குகள்நிருபிக்கப்படாமல் தோல்வி அடைந்துள்ளது. மேலும் பல வழக்குகளில் தலித்துகளை மேல் சாதியினரோடு சமரசம் செயு;து கொள்ளுமாறு நிர்பந்தம் செய்வது போன்ற செயல்பாடுகளில் காவல்துறை ஈடுபடுகின்றனர்.
தீண்டாமை மற்றும் வன்;கொடுமைகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கவேண்டுமென்று இந்தச்சட்டம் சொல்கிறது. ஆனால் புதுச்சேரியில் எதற்கு தனிநீதி மன்றம் என்று கேட்கின்ற அளவிற்கு வழக்குகள் பதிவாகாத நிலை உள்ளது. எனவே தாழ்த்தப்பட்டோர் மற்றம் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கறாராக அமுல்படுத்த வேண்டும் என்று இந்த .மாநாடு புதுச்சேரி அரசை வற்புறுத்துகிறது.
5. இடஓதுக்கீடு சட்டத்தை கறாராக அமுலாக்க கோரியும், பழங்குடியினர் மற்றும் தலித் கிறித்தவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கும் இடஓதுக்கீடு கோரியும், அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரியும் தீர்மானம்.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது உள்ள இடஓதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் கல்வியில், வேலைவாய்ப்பில் 16 சதம் தலித்துகளுக்கு வழங்கப்படுகிறது. சட்டரீதியான அனுமதி இருந்தாலும் கூட அரசினால் இது முழுமையாக அமுலாக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே? ஏனெனில் அரசு மற்றும் அரசுதுறை நிறுவனங்களில் பணியாளர் நியமனம் ஏதும் வேலைவாய்ப்பகத்தின் மூலம் நடப்பதில்லை. மாறாக கொல்லைப்புற வழியாக நியமனம் நடப்பதால் சமூக நீதியும் இடஓதுக்கீடும் மறுக்கப்படுகிறது. குறிப்பாக கூட்டுறவுத் துறையில் எந்த கூட்டுறவுச் சங்கத்திலும் இடஓதுக்கீடு அமுலாக்கப்படவில்லை.
இடஓதுக்கீட்டு பலன்கள் தகுதியுள்ள தலித்துகளுக்கு கிடைக்காமல் செய்யக்கூடிய வகையில் அரசு துறைகளில் முந்துரிமை பட்டியல் தயாரிக்கின்ற போது தலித்துகள் புறக்கணிக்கப்படுகின்றனர். அதனால் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவதும் காலம் தாழ்த்தப்படுவதும் தொடர்கிறது. புதுச்சேரி அரசு இதில் கவனம் செலுத்தி சட்டரீதியான பலன்கள் தலித்துகளுக்கு கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். இடஓதுக்கீடு சட்டம் கறாராக அமுல்படுத்தபட வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தின் தலித் மக்களில் உட்பிரிவான அருந்ததியர்கள் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். பெரும்பாலும் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தோல் தொழிலை நம்பியுள்ள இம்மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாக உள்ளது. இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவோ தொழில்ரீதியாக முன்னேற்றவோ அரசிடம் எந்த திட்டமும் இல்லை. வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், மரத்தடியிலும், தெருவோரத்திலும், சாக்கடையில் ஓரத்திலும் ரூபாய் 2, ரூபாய் 5க்கும் அல்லல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
சொந்த நிலமின்றி. சோந்த வீடின்றி, சொந்த மனையின்றி பெரும்பகுதி குடும்பங்கள் உள்ளன. புதுச்சேரி அரசின் பணிகளில் சுமார் 125-150 பேர் மட்மே அதுவும் பெரும்பாலும் நான்காம் தர ஊழியர்களே. வறுமையின் காரணத்தால் அருந்ததியர் மாணவர்கள் ஆரம்பக் கல்வியைக் கூட பெற இயலவில்லை. மேற்படிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை.
கல்வி வேலைவாய்ப்புக்கான தலித் இடஓதுக்கீடு 16 சதம் புதுச்சேரியில் அமுலில் இருந்தாலும் கல்வியில், வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள அருந்ததியர்களால் இடஓதுக்கீடுகளின் பலன்களை அனுபவிக்க முடியாத நிலை உள்ளது. ஆதலால் அருந்ததியர் மக்கள் தொகை அடிப்படையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று இந்த தீண்டாமை ஓழிப்பு மாநாடு வற்புறுத்துகிறது.
பழங்குடியின மக்களுக்கு 1மூ இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி அரசு இந்த இடஓதுக்கீட்டை மறுத்து வருகிறது. பழங்குடியின மக்களுக்கு பூகோள ரீதியில் இடஓதுக்கீடு என்று பார்க்காமல் அம்மக்களின் வாழ்க்கை முறை கலாச்சார முறை, தொழில் என்ற வகையில் பழங்குடியின மக்களை வகைப்படுத்தி பழங்குடியின மக்களுக்கு 1மூ இடஓதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பில், நலத்திட்டங்களில் வழங்க வேண்டும்.
தலித்தாக தொன்றுதொட்டு இருந்து வரும் மக்கள் சூழல் காரணமாக கிறித்துவ. இஸ்லாமிய மதங்களுக்கு மாறி வாழ்ந்து வருகிறார்கள். மதம் மாற்றம் என்பது அவரவர் மனம் சார்ந்த ஒன்றாகும். இதை காரணம் காட்டி தொன்றுதொட்டு தலித் மக்களோடு வாழ்ந்து எந்தவித மாற்றமும் வாழ்க்கையில் அடைந்திடாத இம்மக்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவது நியாத்திற்கு புறம்பானதாகும். எனவே தலித் கிறித்துவ, இஸ்லாமிய மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.