மத்திய பட்ஜெட் 2004-2005 அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் சிபிஎம் பிரதேச செயற்குழு கருத்து

குறைந்த பட்ச பொதுத்திட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறைபாடுகளை நீக்குமாறு வலியுறுத்துகிறது. மத்தியபட்ஜெட்டில் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பல சலுகைகள் வரவேற்க வேண்டியவை

‘ கல்விக்காக சுமார்ரூ 5000 கோடி நிதி திரட்டுவது
‘ ஆரம்பக்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்;ளது.
‘ சுகாதாரத்திற்காக துவக்கப்பட இருக்கிற இன்சூரன்ஸ் திட்டம்.
‘வருமான வரிக்கான ஊதிய வரம்பை ஒரு லட்சமாக உயர்த்தி இருப்பது
‘சென்வாட் வரியை ரத்து செய்வதோடு சிட்டா நூலுக்கான வரியை குறைத்திருப்பது.
‘கடல் நீரை குடி நீராக்க சென்னைக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது
‘ குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுப்பதோடு,பாசன நீர் பெருக்கத்திற்காகஏரி,குளம் போன்ற நீர்த்தேக்கங்களை மராமத்து செய்வது.
‘அனைவருக்கும் மின்வசதி ஏற்படுத்தித் தருவது.
‘ குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை கொடுக்க திட்டம் உருவாக்குவது.
‘ தொழிற்பயிற்சி கல்வி (ஐடிஐ) நிலையங்களை தரம் உயர்த்துவது என்று முடிவு செய்திருப்பது போன்ற பல வரவேற்கப்பட வேண்டிய அம்சங்கள் படஜெட்டில் உள்ளன.
மேற்கண்ட வரவேற்க வேண்டிய பல அம்சங்கள் இருப்பினும் ஏற்க இயலாத சில அம்சங்களும் பட்ஜெட்டில் உள்ளன.

தொலைபேசி துறையில் வெளிநாட்டு மூலதனம் 74 சதவீதம் அனுமதிப்பதும் இன்சூரன்சில் 49 சதவீதம் அனுமதிப்பதும்,விமான போக்குவரத்துத்துறையில் 49 சதவீதம் மனுமதிப்பதும் ஏற்புடையதல்ல. சிறு தொழில் பட்டியலில் இருந்து 85 வகைகளை நீக்கியிருப்பது சிறு தொழிலை கடுமையாக பாதிக்கும்.

நிதி பற்றாக்குறையை போக்கிட முயற்சி எடுக்கும் தேவை உள்ள போது மூலதன வரியை ரத்து செய்திருப்பது சரியான அணுகுமுறை இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஒட்டுமொத்தத்தில் குறைந்த பட்ச பொதுத்திட்டத்தில் உள்ள பல அம்சங்களை அமுலாக்கிட முயற்சி பட்ஜெட்டில் உள்ளது.இருப்பினும் சில குறைபாடுகள் உள்ளது. இவைகளை களைந்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேச செயற்குழு மத்திய அரசை வற்புறுத்துகிறது.

இவண்

(தா.முருகன்)
செயலாளர்

Leave a Reply