வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு தீர்ப்பு சிபிஎம் வரவேற்பு

வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீது 1992ல் நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ₹10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு.

“பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.. குற்றம் புரிந்தவர்களிடம் ₹5 லட்சம் வசூலிக்க வேண்டும்” – நீதிபதி வேல்முருகன்

“அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – நீதிபதி வேல்முருகன்

“பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும்”  – நீதிபதி வேல்முருகன்

269 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள். தீர்ப்பு வரும் போது 54 பேர் உயிருடன் இல்லாததால் மீதி இருக்கும் 215 பேருக்கும் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை .

தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி

Leave a Reply