லக்னோ, அக். 6 2020 மின் வினியோகத்தை தனியார் மயப்படுத்தும் முடிவை திரும்பப் பெற்றது உத்திரப்பிரதேச அரசு!
போராடி வென்ற தொழிலாளர்களுக்கு வாழ்த்து!
உத்தரப் பிரதேச அரசுக்கு சொந்தமாக 5 மின்சார விநியோக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பூர்வாஞ்சல் டிஸ்காம் நிறுவனத்தை தனியாருக்கு விட உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்தது. அதனை எதிர்த்து உத்தரவை மின்சார தொழிலாளர்கள் சமரசமற்ற போராட்டத்தை நடத்தினார்கள்.
தலைவர்கள் மீதும் தொழிலாளர்கள் மீதும் அரசு தன் அதிகார வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. அந்த மாநிலத்தின் இதர தொழிலாளர்களிடம் இருந்தும் மத்திய தொழிற்சங்கங்கள் இடமிருந்தும் கடுமையான ஆட்சேபனைகளும், கண்டனங்களும் எழுந்தன.
உத்தரபிரதேச மின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் மின் விநியோகம் நேற்றிரவு முழுவதும் நிறுத்தப்பட்டது. இதனால், துணை முதல்வர் உட்பட 36 அமைச்சர்கள். 150 எம்எல்ஏக்கள் வீடுகள் இருட்டில் மூழ்கின.
உத்தரபிரதேச மாநிலத் தில் மின்சாரத் துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின் ஊழியர்கள் வேலைநி றுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மின் விநியோகம் வழங்கப்படாததால், லட்சக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகினர். தலைநகர் லக்னோவில் உள்ள துணை முதல்வர் மற்றும் எரிசக்தி அமைச் சர் உட்பட மொத்தம் 36 அமைச்சர்கள். 150 எம்எல்ஏக்கள் வீடுகளுக் கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. அனைத்து அமைச்சர்களின் வீட்டிலும் இருள் சூழ்ந்த நிலையே நீடித்தது. நேற்றிரவு வரை மின் விநி யோகம் செய்யாததால், மக்கள் இரவில் தெருக்களில் நடந்து செல்வதைக்காண முடிந்தது. மின்வாரியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, லக்னோ முதல் நொய்டா வரையிலும், மீரட் முதல் வாரணாசி வரையிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 10 முதல் 16 மணிநேரம் மின்வெட்டு உள்ளது. பிரயாகராஜ், லக்னோ, வாரணாசி உள்ளிட்ட பல பெரிய நகரங்களின் மின் நிலையங்கள் மூடப் பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். அதேநேரத்தில்,ஜான்பூர், அசாம்கர், காசிப்பூர், மவு, பல்லியா. சாண்டவுலி உள்ளிட்ட பல மாவட் டங்களில் மின்விநியோகம் நேற்று காலை 9 மணி முதல் நிறுத்தப்பட்டதால், மக்கள் விடியவிடிய அவதிக்கு ஆளாகினர். மின் சாரதுறை தொழிலாளர்க ளின் வேலைநிறுத்தத்தால், பலஇடங்களில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், பிஜேபி கட்சியினருக்கும் மக்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல்கள் நடந்தன.
மாநிலத்தில் மின் விநி யோக நிலைமை மோசம டைந்ததை தொடர்ந்து. மின்சார ஊழியர்கள் சங்கங்களுடன் எரிசக்தி அமைச்சர் ஸ்ரீகாந்த்சர்மா பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது, பூர் வஞ்சல் வித்யுத் வித்ரான் நிகத்தைதனியார்மயமாக்கும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக எரிசக்தி அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா அறிவித்தார். அதனால், இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற் பட்டது.
ஆனால், உத்தரபிர தேச மாநில பவர் கார்ப்ப ரேஷனுக்கும், மின் ஊழி யர்களுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் ஏற்பட வில்லை. மின் ஊழியர் தொடர்பான ஒப்பந்தம் குறித்து அரசுக்கு கால அவகாசம் தேவை என்று கூறப்பட்டதால். மின் ஊழியர்கள் சங்கங்கள் அதிருப்தி அடைந்தன. அதனால். மின் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
பிறகு மாநில அரசின் அமைச்சரவை குழு, தனியார் மதத்திற்கான முன்மொழிவை திரும்பப் பெறுவது என முடிவு செய்திருக்கிறது. தனியாருக்கு தருவதை தவிர்த்து இதர சீர்திருத்தங்களை மின்சார தொழிலாளர் சங்கங்களை கலந்துகொண்டு செய்வதாக அரசு உறுதி அளித்து இருக்கிறது.
போராடி வெற்றி பெற்ற தோழர்களுக்கு நம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.