வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் அரசியல் சட்டத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்

அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது அப்பட்டமான தாக்குதல் நடத்தும் வகையில் புதனன்று வக்பு  வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து  உள்ளது பாஜக அரசு.

இந்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டால், அதனை அறிமுக நிலையிலேயே தோற்கடிப்பது என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறும், அதில் பங்கேற்பதைக் கூட தள்ளிவைத்து, மசோதாவை முறியடிப்பதே தங்களின் முதல் பணி என்று நாடாளுமன்றம் சென்றுள்ளனர்.

நாடு முழுவதும் ‘வக்பு’ வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில்  வக்பு சட்டத் திருத்த  மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட்  மாதம்  மக்களவையில் அறிமுகம்  செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தம் ஒரு மதம் சம்பத்தப்பட்ட பிரச்சனை மட்டும் அல்ல மதச்சார்பின்மையை தூக்கிப்பிடிக்கும் இந்திய அரசியல் அமைப்பின் மீதான அப்பட்டமான தாக்குதல் என எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிப்பை தெரிவித்ததை தொடர்ந்து பாஜக எம்.பி. ஜெகதாம்பிகாபால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.  மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தையும் நிராகரித்து விட்டு, பாஜக தரப்பு முன்வைத்த திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இந்நிலையில் தான் புதனன்று  நாடாளுமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார்.

இதையடுத்து மசோதா தொடர்பான விவாதம் என்பது தொடங்கியது. வக்பு சட்டத்திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்ய வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டது ஏற்புடையதல்ல என இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

  • ஒரு முஸ்லிம் எம்.பி. கூட  இல்லாத கட்சி முஸ்லிம்களை காப்பாற்றப் போவதாக பொய்ப் பிரச்சாரம் செய்கிறது.
  • சிறுபான்மையினருக்கு எதிராக வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • நாளை இது போன்ற ஒரு பிரச்ச னை ஒவ்வொரு தனி நபருக்கும் வர லாம்.
  • நாடாளுமன்ற குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வக்பு மசோதாவில் பிரதிபலிக்க வில்லை.

ஒட்டுமொத்த வக்பு சொத்து களை அபகரிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது என கடுமை யாக விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.   வக்பு திருத்த மசோதா மீது 10 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டு மக்களவையில் நிதிஷ்குமார், மற்றும் சந்திரபாவு நாயுடு துரோகத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply