இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன?

இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன?
சீத்தாராம் யெச்சூரி

எல்லா அரசியல் கட்சிகளுக்கு கீழும் பல்வேறு அமைப்புகள் செயல்படும்.
ஆனால், ஆர்எஸ்எஸ் கீழ் மட்டும் தான் பிஜேபி எனும் அரசியல் கட்சி செயல்பட்டு வருகிறது. எனவே தான் இதனை பிறிதொரு அரசியல் கட்சியாக மட்டும் கருத முடியாது.பாசிச சிந்தனை படைத்த ஆர் எஸ் எஸ் ஆல் வழி நடத்தக்கூடிய நச்சுத்தன்மை கொண்ட அரசியல் இயக்கமாக இருந்து வருகிறது.

இதனால் தான் ஆர் எஸ் எஸ் ஐ பற்றியும் , அதன் தத்துவார்த்த அடித்தளங்களை பற்றிய மிக விரிவான பகுப்பாய்வும் தேவைப்படுகிறது.
அதன் கொள்கைகள், செயல்பாடு,அதன் கீழ் உள்ள பல்வேறு அமைப்புகள் என ஒவ்வொரு அம்சத்தையும் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.
இந்நூல் அத்தகைய திட்டவட்டமான நிலைமை பற்றிய, திட்டவட்டமான பகுப்பாய்வு மூலம்
1993 ஆம் வருடம்  சித்தாராம் யெச்சூரியால்   எழுதப்பட்ட இந்து ராஷ்ட்ரம் எனும் நூல் இந்திய தத்துவ போராடடத்திற்கு வழங்கிய மகத்தான கருத்தியல் ஆயுதமாகும்.

ஒவ்வொரு சொல்லுக்கும் வார்த்தைக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கும் என்றார் மாவோ.
இந்து ராஷ்டிரம் என்ற சொல்லின் வேர் எங்கு உள்ளது ? என்பதை ஆராய்ந்து  பிரண்ட்லைன் இதழில்  வந்த கட்டுரைகள் பின்னர்  நாட்டு மக்களிடையே அம்பலப்படுத்திய நூலாக
வெளிவந்தது.

ராஷ்ட்ரிய சுயம் சேவக் அமைப்பின் சித்தாந்த மூளையாக செயல்பட்ட அதன் சுப்ரீம் தலைவர் குருஜி கோல்வாக்கர் ஆவார்.
1938 ஆம் ஆண்டில் 77 பக்கங்கள் கொண்ட நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் எனும் தலைப்பில் புத்தகம் எழுதினார்.
1939 ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளிவந்தது .
நாம் அல்லது  வரையறுக்கப்பட்ட நம் தேசம் என்ற இந்நூலில் சாவர்க்கர் அடிக்கோடிட்ட இந்துத்துவா என்ற சித்தாந்தத்தை கோல்வாக்கர்  விளக்கியுள்ளார்.
இந்த நூலின் முதல் பதிப்பை ஆதாரமாக கொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாசிச
செயல்திட்டம் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துவதை தெள்ளத் தெளிவாக சீத்தாராம்யெச்சூரி விளக்கியுள்ள இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? நூலாகும்.

*பொய்களின் பவணி…*

இப் புத்தகம் வெளிவந்தவுடன் சீதாராம் யெச்சூரிக்கு எதிராகவும், புத்தகத்தை மறுத்தும் சங்பரிவாரம் முன்வைத்த பொய்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை என்.ராம் அறிமுக குறிப்பில் பட்டியலிடுகிறார்.

1.கேஜிபி பாணி தவறான தகவல் என்றும் 2.குருஜிக்கு கூறியதாக கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை என்றும்                         ‌.            
3.குருஜியால் எழுதப்பட்ட புத்தகமல்ல                             4..ஜி.டி சாவர்க்கர் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு என்றும் பொய்களை அவிழ்த்து விட்டனர்.

ஆனால், அதற்கு பதிலடியாக கோல்வாக்கரின் முன்னுரையை வைத்து சந்தேகத்துக்கிடமின்றி அவரால் எழுதப்பட்ட புத்தகம் என்றும், ராஷ்டிர மீமான்சா ஜி டி சாவர்க்கர் ஆதார நூல்
சாராம்சம்,
அதன் பின்னர் வெளியிட்ட இந்நூலிலும் சாராம்சம் மாறவில்லை.
அதில் வரும் முன்னுரை மட்டுமே நீக்கப்பட்டது.அம் முன்னுரையில் உள்ள சில கருத்துக்களுக்கு கோல்வாக்கருக்கு உடன்பாடு இல்லை என்ற காரணமே ஆகும்.
அவர்கள் வெளியிட்ட நூலையே ஏன் இல்லை என்று மறுக்கின்றனர்.
ஆர் எஸ் எஸ் இன் தத்துவ அடிப்படையை மூடி மறைக்கும் நோக்கமாகும்.

தோழர் ஜி ராமகிருஷ்ணன் எழுதியுள்ள முன்னுரையில் இந்து ராஷ்ட்ரத்தின் ஆழ்கடல் போன்ற ஆழத்தையும்,ஹிட்லர் துவங்கி  சமகால குற்றவியல் சட்டங்கள் வரை அம்பலப்படுத்துகிறார்.

*பாசிஸ்ட் பாணியிலான செயல் திட்டம்…*

இந்து ராஷ்ட்ரம் என்று அமைக்க விரும்பும் தங்களுடைய உண்மையான பணித்திட்டத்தின் அனைத்து பாசிஸ்ட் பாணியிலான அம்சங்களையும் தோலுரித்து காட்டக்கூடிய புத்தகமாகும்.
இந்நூலில் முன் வைக்கப்படும் கருத்தியல் ரீதியான ஆதாரங்கள்…
1. காந்தி படுகொலையால் தடையை விலக்க கலாச்சார அமைப்பு என்று சொல்லி அரசாங்கத்துடன் போடப்பட்ட ஒப்பந்தமானது. சங்பரிவாரத்தில் இரட்டை முகம் காட்டுகிறது.
1951 ல் பாரதீய ஜனசங்கம் பின்னர் பாரதீய ஜனதா கட்சி உருவாக்கியது.
2.அரசமைப்புச் சட்டம் பாரதத்தினருக்கு எதிரானது
3. ஆர் எஸ் எஸ் இன் அமைப்புச் சட்டம் மக்கள் மத்தியிலே வைக்கப்படவில்லை.
4.சுதந்திரப் போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை.பிரிட்டிசாருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்தது விட முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை உமிழ்ந்தது தான் அதிகம்.
5.அறிவியலையும் வரலாற்றையும் நிராகரிக்கும் போக்கு.

இதில் கோல்வால்கர் “நாம் மற்றும் வரையறுக்கப்பட்ட நம் தேசம்” எனும் நூலின் தத்துவார்த்த அடிப்படைகள்
ஸ்வ என்றால் நாம் என்று துவங்கும் புத்தகம் ஸ்வா என்றால் இந்துக்கள் என்றும், எனவே ஸ்வராஜ்யம் என்றால் இந்துக்கள் ராஜ்ஜியம் அல்லது இந்து ராஷ்ட்ரம் என்றும் ஒட்டுமொத்த புத்தகமும் அடங்கி இருக்கிறது.

*தத்துவார்த்த அடிப்படை…*

பூகோள நிலை, இனம்,மதம், கலாச்சாரம் மற்றும் மொழி என
தேசம் என்று வரையறுப்பதற்கு கோல்வாக்கர் ஐந்து குணாம்சங்களை அல்லது ஒற்றுமைகளை குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் உள்ள இந்துக்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட ஐந்து தகுதிகளையும் பெற்றிருக்கிறார்கள் என்றும், எப்போதும் ஓர் இந்து தேசமாகவே இருந்து வந்திருக்கிறது என்பதை நிறுவுவதே கோல்வாக்கர் செயல்பாட்டின் நோக்கமாகும்.

1. இனம் என்று முக்கியமான மூலக்கூறாகும். இந்து என்கிற சொல்லையும் ,ஆரியர் என்கிற சொல்லையும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துகிறார். ஆனால், வரலாற்றுச் சான்று வேறானதாக இருக்கிறது.
2.சமஸ்கிருத வேதத்தின் மொழியியல் சாட்சியமானது. ஈரானிலிருந்து ஓர் இந்து ஐரோப்பிய மொழி இந்தியாவிற்குள் வந்தது.
ஆனால் அது இந்தியா ஆரியர்களின் தாய்நாடு எனும் கற்பித்தத்தை ஆதரித்திடவில்லை என்கிறது வரலாற்று ஆய்வு.ஒரே மொழி சமஸ்கிருதம் தான் மற்ற மொழிகள் அனைத்துமே அதிலிருந்து பிறந்த குழந்தைகள் தான் இமயமலையில் இருந்து தெற்கே பெருங்கடல் வரை என நகைக்கத் தக்க வாதங்களை முன் வைத்தார்.
3. தேசம் என்பதை மேற்கத்திய சித்தாந்தம் என்கிறார் ஜன்பத் என்கிற கருத்தாக்கம் மதம் பண்பாடு மொழி மூன்றையும் இணைக்கிறது என்கிறார்.
4. காலம் காலமாய் ஆப்கானிஸ்தானில் இருந்து இலங்கை வரை ஒன்றாக இந்துஸ்தானாக இருந்தது என போலி வரைபடத்தை அட்டைப்படத்திலேயே வெளிப்படுத்துகிறார்.
5. இந்து ராஷ்டிரத்தில் சமூக ஒழுங்கு எப்படி இருக்கும்? உலகின் முதலாவதும், மாபெரும் சட்ட வல்லுநர் மனு என்கிறார் கோல்வாக்கர்.
மனு ஸ்மிருதி முன்வைக்கும் சாதிய கட்டமைப்பும் பெண் அடிமைத்தனமும் பிராமணிய மேலாதிக்கத்தையும் இந்துஸ்தானின் சமூக ஒழுங்கு என்கிறார்.

*ஹிட்லரும் கோல் வாக்கரும்…*

ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் பாதுகாப்பதற்கு யூத இனத்தை அழித்தது.
இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு சரியான படிப்பினை என்கிறார்.
யூத இனத்திற்கு மாற்றாக முஸ்லிம்களை எதிரிகளாக வகைப் படுத்துகிறார்.
அதன் அமைப்பு முறைகளையும் முன்னெடுக்கிறார்.
பொய்களை மீண்டும் மீண்டும் சொல்வதின் மூலம் உண்மைகளாகின்றன என்கிற கோயோபல்ஸின் குயுக்குதியை
பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் 300 வகையான , பலவிதமான ராமாயணத்தை கூட தங்களது சதி திட்டங்களுக்கு கருவிகளாக உள்ளன.
இன்னும் புராணங்களையும், நம்பிக்கைகளையும் விட்டு வைக்கவில்லை.

கோல்வாக்கரின் புத்தகம் வெளிவந்த பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜமாத் இ இஸ்லாமி உருவாக்கப்படுகிறது உருவானது. மெளடுடி தலைமையில்  அமைப்பு மாநாட்டு நடைபெற்றது.
கோல்வாக்கர் எப்படியோ ,அதே போன்று ஜமாத்  இயக்கத்திற்கு மெளடுடி.
எப்படி நாங்கள் பாகிஸ்தான் அல்லாவால் வடித்தெடுக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் பாகிஸ்தானை அமைக்க இருக்கிறோமோ அதே போன்று இந்தியர்கள் அரசையும் சமூகத்தையும் இந்து சுவடிகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
இதிலிருந்தே இந்து வகுப்புவாதமும், முஸ்லிம் அடிப்படை வாதமும் ஒன்றை ஒன்று ஊட்டி வளர்க்கின்றன. இரண்டுமே நடைமுறையில் வகுப்புவாத நஞ்சை ஆழமாக பரப்பி நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

ஹிட்லர்- கோல்வாக்கர் -மெளடுடி ஆகியோரின் அரசியல் ரீதியான கூட்டு எதற்காக?

நாட்டு மக்களின் இன்றைய நிலைமைகள் குறித்தோ அவர்களின் துன்ப துயரங்களை பற்றியோ எவ்வித அக்கறையும் இல்லை.
பின்னர் யாருடைய நலன்களுக்காக இருக்கிறது?
பாசிசம் முதலாளிகளின் மிகவும் பிற்போக்கான சக்திகளின் நலன்களுக்காக தான் செயல்படுகிறது.
எனினும் அது முதலாளித்துவக்
கட்சிகளின் செயல்களினால் அவற்றை கைகழுவிவிட்டு வெளியேறும் விரக்தி அடைந்த மக்களை வழி மறித்துத் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள முயல்கிறது. இதற்காக, அது முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் ஆட்சியில் இருந்த முதலாளித்துவக் கட்சிகளின் சமாதானமற்ற அணுகுமுறையை கடுமையாகத் தாக்குவதின் மூலமாக மக்களின் நம்பிக்கையை பெறுகிறது.

எனவே தான். தோழர் சீத்தாராம் யெச்சூரி திடீரென நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் நடத்திய போராட்டத்தை முன்னெடுக்கவும், இத்தகைய பாசிஸ்ட் சவாலை எதிர்கொண்டு முறியடிப்பதற்கான கருத்தியல் ஆயுதத்தை நமது கரங்களுக்கு அளித்து வலு சேர்த்துள்ளார்.
வரலாற்றின் பக்கங்களில் முன் எப்போதும் இல்லாத சவாலை சந்திக்க மாமேதை.யெச்சூரி அளித்த கருத்தியல் ஆயுதம் இந்திய மக்களின் பேராயுதமாக விளங்கும்.

நூல் அறிமுகம்
எஸ்.பாலா ,
மாநிலக்குழு உறுப்பினர்,சிபிஐ(எம்).

Leave a Reply