சி.எச்.பாலமோகனன் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

பத்திரிக்கைச்செய்தி ——- 31.8.2017

புதுச்சேரி அரசு செயல்படுத்த உள்ள சரக்கு துறைமுகம் பற்றியும், செயற்கை மணல்திட்டு அமைக்கபடுவது பற்றியும் ஆட்சியாளர்களுகிடையில் கருத்து மோதலும்,  பொதுமக்கள்  மத்தியில்  பல்வேறு  ஐயப்பாடுகளும் எழுந்துள்ளது.

நேர்மையாகவும், வெளிபடைதன்மையோடும் இந்த திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஆட்சியாளர்கள் தன்னிச்சையாக திட்டத்தை செயல்படுத்த முனைவதும், மாற்று கருத்து கொண்ட சூழல்லியல்யாளர்கள் மிரட்டப்படும் தொடர்கிறது. இது ஜனநாயகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரான மிரட்டலாகும்.

மீன்பிடி துறைமுகத்தை மேலும் ஆழப்படுத்தினால் சுற்றுசூழல் பாதிப்பு இருக்குமா, சரக்கு கப்பல்கள் வருவதால் மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுமா, ஆண்டுக்கு 10லட்சம் டன் அளவில் சரக்கு கையாள்வதற்கு போக்குவரத்து கட்டமைப்பு உள்ளதா? போன்ற அம்சங்கள் குறித்து சரக்கு துறைமுகத்திட்டத்தில் தெளிவு இல்லை. மொத்த்தில் இத்திட்டத்திற்கான தொழில் நுட்ப சாத்தியகூறுகள் பொருளாதார மேம்பாடுகள், இத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள், அதை மட்டுபடுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை  என்ன என்பது போன்ற துறைமுகப் செயல்பாட்டின் உள்ளடக்கம் குறித்து பொதுமக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வில்லை.

ஆகவே இப்பிரச்சனைகளில் பல அமைப்புகள் இணைந்து நல்லாட்சிக்கான கூட்டு இயக்கம் சார்பில் அதன் தலைவர் சி.எச்.பாலமோகனன் மேற்படி திட்டம் குறித்த சூழல்லியல்யாளர்கள் மற்றும் மக்களின் கருத்தினை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகம் மற்றும் துறைகளுக்கு மனு அளித்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும் அறிய வருகிறது. இப்பிரச்சனையினை அரசியலாளகவும், வெளிப்படை தன்மையிலும் எதிர்கொள்ள வேண்டிய ஆட்சியாளர்கள்  சிலரை தூண்டிவிட்டு வன்முறையை அரங்கேற்ற முயற்சித்துள்ளனர்.

இன்று 31.8.2017 நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் திரு.பாலமேகனன் வீட்டை முற்றுகையிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளதோடு, மிகத் கீழ்தரமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதற்கு முன்பு இப்பிரச்சனைப்பற்றி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது உடன் இருந்தவர்கள் அப்போதும் மிரட்டலில் ஈடுபட்ட சம்பவம் நடைபெற்றது. சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி அவர்கள் இந்த செயலை தடுக்கவும் இல்லை கண்டிக்கவும் இல்லை.

வெள்ளை அறிக்கை

இதன் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு திரு.பாலமோகனனுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய செயல்கள், ஜனநாயக நடவடிக்கைகளை வன்முறைமூலம் அடக்கி ஒடுக்கும் காட்டாச்சி முறைக்கு காங்கிரஸ் அரசு சென்றுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. மீனவர்கள், பொதுமக்கள் நலன் சார்ந்த இப்பிரச்சனையில் சமூக பொறுப்புணர்வுவோடு செயல்படும் போது, வன்முறை அரசியல் மேற்கொள்ளப்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் மீனவர்கள், பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆகவே  சரக்கு துறைமுகம் திட்டம் பற்றி புதுச்சேரி மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை அரசு வெளியிட வேண்டும் என்று  கேட்டு கொள்கிறது.

இப்படிக்கு

ஆர்.ராஜாங்கம், செயலாளர்

Leave a Reply