ஏன் சோசலிசமே உண்மையான மாற்று என்சிறோம்? இடது மாடல் என்பதற்கான உதாரணங்கள் என்ன?
கீழே உள்ளவை சில மாற்ற வேண்டியவை பல! அதற்கு தேசம் இடது பக்கம் திரும்ப வேண்டும்.
சோசலிச ஆட்சி மலர்ந்தால் என்ன நன்மை?
மாநிலங்களில் மேலவை இருக்காது, மாநில ஆளுநர்கள் மேலிருந்து நியமிக்கப்பட மாட்டார்கள்!
சாதி,மத வகுப்பு தேசிய இன பாலியல் அடிப்படையில் எத்தகைய பாராபட்சமும் காட்டப்படாது!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தேசிய மொழியில் பேசும் உரிமை வழங்கப்படும் அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்யப்படும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழு அதிகாரமும் பொறுப்பும், நிதியும் வழங்கப்படும்!
கருப்பு பணத்தையும் லஞ்சத்தையும் ஒழித்து பொது வாழ்க்கையில் ஈடுபடுவோரின் பொருளாதார குற்றங்கள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்!
நீதித்துறை நிர்வாகத்தில் ஜனநாயக மாற்றங்களை அறிமுகப்படுத்தி உரிய காலத்தில் நேர்மையாக நீதி வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்
தங்குதடையற்ற சுதந்திரம், மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு உரிமை, பேச்சுரிமை, பத்திரிக்கை சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை. வேலை நிறுத்தம் செய்யும் உரிமை. அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் அமைக்கும் உரிமை, இடம்பெயரும் மற்றும் பணியாற்றும் உரிமை, மாற்றுக் கருத்து கூறும் உரிமை ஆகியவை உத்திரவாதம் செய்யப்படும்!
அனைத்து குடிமக்களுக்கும் வேலை செய்யும் உரிமை அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்தப்படும் அனைவருக்கும் சமஉரிமை, சம வேலைக்கு சமஊதியம் உறுதி செய்யப்படும்!
ஒரு சாதியினர் மீது மற்றொரு சாதியினரின் சமூக ஒடுக்குமுறை ஒழிக்கப்படும். தீண்டாமை மற்றும் சமூக அடக்குமுறையின் அனைத்து வடிவங்களும் சட்டத்தினால் தண்டிக்கப்படும்!
பெண்களுக்கு எதிரான சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாரபட்சங்கள் நீக்கப்படும் ஆண்களுக்கு நிகராக நிலம் உள்ளிட்ட சமமான வாரிசு சொத்துரிமை வழங்கப்படும்!
அனைத்து நிலைகளிலும் விரிவான மற்றும் அறிவியல் பூர்வமான கல்வி, மேல்நிலை கல்வி வரை இலவசமாக வழங்கப்படும்!
சுகாதார மருத்துவம் மற்றும் மகப்பேறு சேவைகள் இலவசமாக வழங்குவதோடு தேவையான விரிவான ஒருங்கிணைப்பு ஏற்பாடு செய்யப்படும்!
உடல் ஊனமுற்றோர் முழு குடிமகனாக சமூகத்தில் உயர்ந்து வாழ்வதற்கான உரிமைகள் உத்தரவாதம் செய்யப்படும்!
தீவிர நிலச்சீர்திருத்தத்தைச் செயல்படுத்துவதன் மூலம் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படும்!
விவசாயத் தொழிலாளர் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கப்படும்!
வட்டிக் கடைக்காரர்கள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு கைவினைஞர்கள் தரவேண்டிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
பெரிய வர்த்தகர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் திடீர் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையிலான அரசு சந்தை முறை வளர்த்தெடுக்கப்படும்.!
விவசாயிகள்,கிராம கைவினைஞர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நீண்டகால, குறைந்த வட்டியிலான கடன்கள் உத்தரவாதப்படுத்தப்படும். விவசாய விளைபொருட்களுக்கு நியாய விலை உறுதி செய்யப்படும்!
பாசன வசதி மற்றும் மின்சார வசதி அதிகரிக்கப்படுவதோடு இவற்றில் முறையான மற்றும் சமமான பங்கீடு கொடுக்கப்படும்!
பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்படும் வளர்த்தெடுக்கப்படும்!