ஏனாம் கடும் வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்குக – சிபிஎம்

yanam 2022புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரை அருகே உள்ளது. கடந்த சில தினங்களாக அங்கு பெய்து வரும் கனமழை மற்றும் கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏனாமின் பாலயோகி நகர், டவுலேஸ்வரம், குருகிருஷ்ணாபுரம், கோன வெங்கட்ட ரத்னம் நகர், அய்யன்னா நகர், பரம்பேட்டா, பிரான்ஸ்டிப்பா, ராஜிவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது ஏனாம் பிராந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு மழை மற்றும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும்  உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் வெள்ளப் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏனாம் மக்களுக்கு புதுச்சேரி அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம் ரூபாய் 5 ஆயிரம் போதாது எனவே அந்த நிதியை 15 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், ஆண்தோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கிலிருந்து, ஏனாம் மக்களை பாதுகாக்க நிரந்தர திட்டம் வகுக்க வேண்டும் மேலும் கோதாவரி ஆற்றின் கரையில் வெள்ளத்தடுப்பு சுவர் பணிகளை அதிகரிக்கவேண்டும் என புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு

இரா. இராஜாங்கம், மாநிலச் செயலாளர், புதுச்சேரி

 

Leave a Reply