தொடரும் சமூக குற்றங்கள், பெண்கள்-சிறுமிகள் மீதான குற்றங்களை கட்டுப்படுத்திட உறுதியான நடவடிக்கை எடுத்திடுக

புதுச்சேரி மாநிலத்தில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சமூக குற்றங்களும், பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் மாநில அரசும், காவல்துறையும் துணிச்சலான, உறுதியான தலையீட்டினை செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு வலியுறுத்துகிறது.

புதுச்சேரி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த பள்ளி சிறுவன வட்டி கும்பலால் கடத்தப்பட்டு காவல்துறையினரால் விரைந்து செயல்பட்டு, சிறுவனை மீட்டதோடு, தொடர்புடைய குற்றவாளிகள் கைதும் நடந்துள்ளது. ஆனால் மாநில அரசு அனுமதியின்றி வட்டி தொழிலை நடத்துவது, கட்டுப்படுத்துவது குறித்து காவல்துறை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் சில காவல்துறையினர் உள்ளிட்ட அரசுப் பணியாளர்கள் என பலர் வட்டி தொழிலை நடத்திவருகின்றனர். கந்துவட்டி, மீட்டர்வட்டி என பலவிதமான வட்டி முறையில் கடன் வாங்கியவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாவதும், சொத்துக்களை இழப்பதும் தொடர்கிறது. இப்பிரச்சனையில் மாநில அரசும், மாவட்ட ஆட்சியரும் உறுதியான தலையீட்டினை செய்திட வேண்டும்.

ரெயீன்போ நகரில் கடத்தப்பட்ட சிறுவன எப்படியோ மீட்கப்பட்டுவிட்டான். ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டவில்லை. சமீபத்தில் பட்டபகலில் வட்டிக்கடை அதிபர் கொலைச் செய்யப்பட்டு தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இக்கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சிறுவன் கடத்தல், வட்டிக்கடை அதிபர் கொலை ஆகிய இரு வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாதது காவல்துறையின் திறமையின்மையா, அரசியல் குறுக்கீடா அல்லது என்ன பிரச்சனை என்பதை மாநில அரசும், காவல்துறையும் தெளிவுப்படுத்த வேண்டும். மத்திய சிறையில் இருக்கும் ரௌடிகளால் வெளித்தொடர்பு கட்டுப்படுத்திய நிலையில் சமூக குற்றங்கள் தொடர்வது கவலையளிக்கிறது.

சிறுமிகளை பாலிய்ல தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆனால் சிறுமிகளிடம் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்ட நபர்கள் கைது செயப்படவில்லை காவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் சிறுமிகளிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக தகவல் வருகின்றன. இந்நிலையில் இவ்வழக்கை சிபிசிஐடி பிரிவி போலீஸ் விசாரணை செய்வது ஏற்புடையதல்ல. நியாயமான விசாரணை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. சிபிசிஐடியிடன் ஒப்படைக்கப்பட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றைல் நியாயம் கிடைப்பதில்லை. ஆகவே, இவ்வழக்கை சிபிஐவசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாநில அரசு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் தொடரும் மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்திட பாலியல் புகார் குழுக்களை அமைத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவண்
வெ.பெருமாள்
செயலாளர்.

Leave a Reply