புதுச்சேரியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

  anand  1.தேமுதிக, மக்கள்நலக்கூட்டணி சார்பில் புதுச்சேரி இலாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அ.ஆனந்து புதனன்று கூட்டணி கட்சி தொண்டர்களோடு ஊர்வலமாக சென்று சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் சிபிஐ  மாநிலக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள்,  உழவர்கரை நகர செயலளார் ஆர்.நடராஜன், எஸ்.லெனின்துரை ஆகியோர் உள்ளனர்.

திருபுவனை  எல்.கலிவரதன் தாக்கல்

2. தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி சார்பில் புதுச்சேரி திருபுவனை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.கலிவரதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் புடைசூல  வில்லியனூர் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் அ.க. விடுதலைச்செல்வன், சிபிஐ தொகுதிகுழு உறுப்பினர் குப்புசாமி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், சிபிஎம் கொம்யூன் செயலாளர் பி.உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாகூர் வேட்பு மனு  தாக்கல்3.   தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி சார்பில் புதுச்சேரி பாகூர் தொகுதியில்  போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.சிவகாமி   கூட்டணி கட்சி தொண்டர்களோடு ஊர்வலமாக சென்று பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் சிபிஐ மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் தொகுதி செயலாளர்  பழனிவேல், தொகுதி செயலாளர் கலியமூர்த்தி, சிபிஎம் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பாகூர் கொம்யூன் செயலாளர் த.தமிழ்ச்செல்வன், பிரதேசக்குழுஉறுப்பினர்கள் கலியன், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

13100900_1720355141571222_1699436108231855937_n

4. தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி சார்பில் புதுச்சேரி நிரவி திருபட்டினம் தொகுதியில்  போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் முகமது தமிம் அன்சாரி   கூட்டணி கட்சி தொண்டர்களோடு ஊர்வலமாக சென்று காரைக்கால் தாசில்தார் அலுவலகத்தில் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.  உடன் சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஎம் பிரதேச செயற்குழு உறுப்பினர் வே.கு.நிலவழகன், காரை மாவட்ட செயலாளர் மாவட்ட நிர்வாகிகள்  ஆகியோர் உடன் இருந்தனர்.

IMG-20160427-WA0060

5. தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு போட்டியிடும் மாஹே  தொகுதியின்  சுயோட்சை வேட்ப்பாளர் டாக்டர் இராமச்சந்திரன் தனது வேட்புமனுவை மாஹே மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

Leave a Reply