பத்திரிக்கை செய்தி
புதுச்சேரி அரசு மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களை புதுச்சேரியிலும் காரக்காலிலும் நடத்தியதின் விளைவாக கடந்த ஏப்ரல் 22ல் கூடிய சட்டமன்ற கூட்டதொடரின் போது மீண்டும் அரிசியும் கோதுமையும் மே மாதம் முதல் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி நேற்று முதல் அமுல்படுத்த தொடங்கி உள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதேநேரத்தில் இரண்டு மையங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஏககாலத்தில் புதுவையின் அனைத்து இடத்திலும் வழங்கப்படவில்லை. அனைத்து ரேஷன்கடைகளிலும் உடனடியாக வழங்கவேண்டும்.
மேலும் புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி சிவப்பு அட்டைத்தார்களுக்கு 25 கீலோ தரமான அரிசியும் மஞ்சள் அட்டைத்தார்களுக்கு 15 கீலோ அரிசியும் 7 அத்தியாவசிய மளிகை பொருட்களும் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுருத்துகிறது.
மத்திய பிஜேபி அரசு மேற்கொண்டுவரும் மக்கள் விரோத கொள்ளைகளை புதுச்சேரியில் அமல்படுத்த ஆளும் என்.ஆர்.அரசு முனைப்புகாட்டி வருவதை கைவிடவேண்டும்.
குறிப்பாக பொதுவிநியோகமுறையை (ரேஷன்) சீர்குலைக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாகத்தான் புதுவையில் உங்கள் கையில் உங்கள் பணம் என்று சொல்லி நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் அமுல்படுத்தாத பொருளுக்கு பதில் பணம் வழங்கும் திட்டத்தை புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி அமுல்படுத்த முயற்சித்து அது மக்களால் போராட்டத்தாலும் முறியடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் புதுச்சேரியில் தொடர்ந்து வேலையின்மை, வறுமையின் காரணமாக மக்களிடம் வாங்கும் சத்தி குறைந்து இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த நிலையில் சமூதாயத்தில் அடித்தட்டு மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்துவரும் இந்த பொதுவிநியோக முறையை பாதுகாக்க புதுவையின் அனைத்துதரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராட தயாராக வேண்டும் என புதுச்சேரி மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.