சிபிஎம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

2011 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில்  சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை தங்கள் மனுக்களை தாக்கள் செய்தனர்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாஹே நிங்களகாக புதுச்சேரியில் 3 தொகுதிகளை ஒதுக்கித்தர வேண்டும் என்று வலியுருத்தியிருந்தனர். இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விரும்பிய லாஸ்பேட்டை, பாகூர் , திருபுவனை (தனி) ஆகிய தொகுதிகளில் வெட்பாளர்கள் மனு தாக்கள் செய்ய கட்சியின் பிரதேசக்குழு முடிவு செய்தது.

லாஸ்பேட்டைதொகுதி

அதனை யோட்டி அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமேகனன் லா°பேட்டை தொகுதியில் போட்டியிட கட்சியின் செயற்க்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், ராமச்சந்திரன், உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை, நகர கமிட்டி செயலாளர் சீனுவாசன், பிரபுராஜ், உள்ளிட்டோர் முன்னிலையில் சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். முன்னதாக லாஸ்பேட்டை பெத்துசெட்டிபேட்டை சிபிஎம் அலுவலகத்திலிருந்து கட்சி ஊழியர்கள், போது மக்கள்ளோடு பாலமோகனன் ஊர்வலமாக சென்று மனு தாக்கள் செய்தார்.

பாகூர் தொகுதி

பாகூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்போட்டியிடும் கட்சியின் கொம்யூன் செயலாளர் எஸ்.பத்மநாபன் கட்சியின் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,வில்லியனுர் கொம்யூன் செயலாளர் முருகையன் பிரதேசக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,கமிட்டி உறுப்பினர்கள் கலியன்,வடிவேல்,ராமசாமி,சரவணன் ஆகியோரோடு சென்று முதலியார் பேட்டையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திருபுவனை(தனி)

cpimthiruphuvaniதிருபுவனை(தனி) தொகுதியில் போட்டியிட கட்சியின் செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன் வில்லியனுhர் வட்டாச்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார். கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள், கொம்யூன் செயலாளர் உலகநாதன், பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன், சங்கர், மணிபாலன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பெரியசாமி, ராமமூர்த்தி, விநாயகம், வடிவேல்,  ஆகியோர் முன்னிலையில் மனுத்தாக்கல் செய்தார்.

மாஹே

மாஹேதொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக கட்சியின் கேரளா கமிட்டி அறிவித்திருந்த டி.கே.கங்காதரனும் வியாழனன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply