மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து புதுச்சேரியில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி சுதேசி பஞ் சாலை எதிரில் நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமை தாங்கினார். மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தோழர் யெச்சூரியின் உரு வப்படத்திற்கு தலைவர்கள், தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சமூக நீதி காத்தவர் தோழர் யெச்சூரி
புகழஞ்சலி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், “சமூக நீதி காப்பதிலும், பொது துறைகளை பாதுகாப்பதி லும் தோழர் யெச்சூரி தனிக் கவனம் செலுத்தினார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது அவரது நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் மற்ற உறுப் பினர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது என்று புக ழாரம் சூட்டினார்.
ஜிப்மரை பாதுகாத்தவர்!
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் பிரதேச தலைவரும், மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கம் பேசுகையில் , “தமிழகம், புதுச்சேரியை நன்கு அறிந்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையை தனியார் மயமாக்கும் முயற்சியை முறியடிப் பதில் யெச்சூரியின் பங்கு மகத்தானது. மதவெறி அரசி யலுக்கு ஒருபோதும் இடம் அளிக்காதவர் என்று புக ழஞ்சலி செலுத்தினார்.
திமுக புதுச்சேரி மாநிலத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சிவா,“இந்தியா கூட்டணி அமைவதற்கு முக்கிய நபராக விளங்கி யவர் தோழர் சீத்தாராம் யெச் சூரி. தமிழக முதல்வருடன் இணைந்து இந்தியா கூட்ட ணியை வலுப்படுத்திய யெச்சூரியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவப் பொழிலன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் புதுச்சேரி தலை வர் நாரா.கலைநாதன், சிபிஎம் மூத்தத் தலைவர் தா. முருகன், முன்னாள் அமைச் சர் விசுவநாதன், சிபிஐ (எம்-எல்) கட்சியின் மாநில நிர்வாகி சோ.பாலசுப்பிர மணியம், திராவிடர் விடு தலைக் கழகம் புதுச்சேரி தலைவர் வீரமணி மற்றும் பல்வேறு ஜனநாயக இயக் கங்களின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று புக ழஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக காமராஜர் சிலையிலிருந்து தோழர் சீத்தாராம் யெச்சூரியின் உரு வப்படத்தை ஏந்தியவாறு ஊர்வலம் நடைபெற்றது.