பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயநிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும். 

பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயநிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. Cpim Puducherry December 2024
புதுச்சேரியில் பெஞ்சல் புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் திங்கள்கிழமை நேரில் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு குழுக்களாக சென்று பார்வையிட்டனர்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட காட்டேரிக்குப்பம்,திருக்கனூர், விநாயகம் பட்டு ஆகிய பகுதிகளில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயநிலத்தை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள்  கொளஞ்சியப்பன், பிரபுராஜ், விவசாய சங்க செயலாளர் சங்கர், சி.பி.எம் கமிட்டி உறுப்பினர்கள்  விநாயகம், ரகுநாத், நாகராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது மழை சூழ்ந்த விவசாய பயிர்களின் பாதிப்புகள் குறித்து அங்கிருந்த விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். அதேபோல் புதுச்சேரி நகர பகுதிகளில் உட்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று கட்சியின் செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு கேட்டு அறிந்தனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் எஸ். ராமச்சந்திரன் கூறியதாவது:-
புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பொழிந்துள்ளது. இந்தப் புயல் மழை பாதிப்பால் அனைத்துப் பகுதி மக்களும் பல்வேறு வகைகளில் பாதி அடைந்துள்ளனர். எனவே ஒன்றிய மாநில அரசுகள் பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்க வேண்டும். ஒன்றிய அரசு புயல் பாதிப்புகளை கண்டறிய உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும். மாநில அரசு முழுமையான கணக்கெடுப்பு நடத்தி நிவாரணங்களை  அறிவிக்க வேண்டும். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அறிவித்துள்ள ஏக்கர் ஒன்றுக்கு 30,000 என்பது ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்க வேண்டும்.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கட்சியின் சார்பில் புயல் பாதிப்பு ஆய்வு செய்து ஆய்வறிக்கையை முதல்வர்  ரங்கசாமி சந்தித்து வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply