புதுச்சேரியை, ஏறத்தாழ 284 ஆண்டுகாலம் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர் ஃப்ரெஞ்சுக்காரர்கள். அவர்களைவிட மோசமாக மத்திய பிஜேபி அரசு புதுச்சேரி மக்களை வஞ்சிக்கிறது.
பிரஞ்சு ஏகாதியபத்தியத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமையில் நடந்த புதுச்சேரி விடுதலைப் போராட்டம் மற்றும் தொழிலாளர்கள் உரிமை போராட்டத்தின் காரனமாக 1954ல் புதுச்சேரி பிரஞ்சிடம் இருந்து விடுதலை பெற்று இந்திய யூனியனோடு சேர்வதா வேண்டாமா என்று கீழூரில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
புதுச்சேரி பகுதிக்கு அனைத்து விதமான உரிமைகளும் அந்தஸ்தும் வழங்கப்படும் என அன்றைய பாரத பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்திய யூனியனோடு புதுச்சேரி பகுதி முழுமையான அதிகார மாற்றம் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி இதே நாளில் இணைக்கப்பட்டது.
ஆனால் இன்று பாஜக அரசால் புதுச்சேரி மக்கள் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு உரிமைகளை இழக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். கடந்த 8 ஆண்டுகளாக புதுச்சேரி வழங்க வேண்டிய நிதியை படிப்படியாக மத்திய அரசு குறைத்துக்கொண்டே வருவதோடு புதுச்சேரிக்கு வழங்கவேண்டிய பல்வேறு சலுகைகளையும் நிறுத்தி வருகிறது. கரோனா நோய் காலத்திலும் எந்தவித நிதி அளிக்காமல் புதுச்சேரி மக்களை வஞ்சிக்கும் செயலை மத்திய அரசு செய்து வருகிறது.
மத்தியில் ஆட்சியாளர்கள் மாநில இறையாண்மையை தகர்த்து போட்டி அரசு நடத்தி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருகின்றது. இத்தகைய போக்குகளை ஜனநாயக அடித்தளம் கொண்ட புதுச்சேரி மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
2005ல் மத்திய, மாநில வரவு தொடர்பாக அமைக்கப்பட்ட திருமதி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான உள்துறை நிலைக்குழுவும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கிடவே பரிந்துரைத்தது. புதுச்சேரி சட்டப்பேரவையில் 13 முறை மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனாலும் இதுவரையில் மத்தியில் இருந்த அரசுகளோ தற்போதைய பாஜகவோ புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை.
புதுச்சேரி தவிர அனைத்து யூனியன் பிரதேசங்களும் மாநில அந்தஸ்து பெற்றுவிட்டன. ஆகவே, புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும்.
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வணிக யுக்தியைப் போல மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சி புதுச்சேரியை இலவச இணைப்பாக கருதுவது ஏற்புடையதல்ல. இரட்டை ஆட்சி முறையை இடதுசாரி கட்சிகள் விரும்பவில்லை. மாநில மக்களும், மாநில சுயாட்சி உரிமையோடு கூட்டாட்சி கோட்பாட்டை விரும்புகிறார்கள்.
ஆகவே, இந்த புதுச்சேரி இந்திய இனைப்பு நாளில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வைக்கும் கோரிக்கை புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும். மேலும் மாநில வளர்ச்சிக்கு தடைபோட்டு பாஜக அரசியலுக்கு விதையூன்றும் துணைநிலை ஆளுநர் வெளியேற வேண்டும். புதுச்சேரிக்கு உள்ள சுமார் 10000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதோடு கூடுதலாக நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
On 16th August, Puducherry celebrated its De Jure Transfer day.
De Jure Transfer Day is the day when Puducherry (then Pondicherry) really got independence.
The then Pondicherry was under French control well after 1947, even when the other parts of India were free. Soon protests rose demanding a free government, culminating in Indo-French dialogues on the issue.
On March 13, 1954, the talks on settlement of French territories began, and the process ended with the signing of a treaty for cessation of French control, in May 1956. The treaty was cemented in the French parliament in May 1962.
On 16th August 1962, there was a complete surrender of Indian territories after the exchange of instruments of ratification between the two nations.
Kizhur, a remote village under the Puducherry, was chosen by the then French Rulers for negotiations with Indian Authorities. It was the only border place of Puducherry that was completely under French Control. All other places shared intermittent borders with Tamil Nadu.