கல்விக் கட்டண உயர்வு விவகாரத்தில் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர், பதிவாளர் இருவரும் ஜனவரி 9 அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் கட்டண உயர்வு, மாண வர்களின் கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின் பல்கலைக் கழக கிளையுடன் இணைந்து பல்கலைக்கழக மாணவர் பேரவை போராட்டம் நடத்தியது. மாண வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்து வதற்கு, மாறாக போராட்டத்தை தடை செய்ய பல்கலைகழக நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்கலைக்கழக மாணவர் பேரவை பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை தீர்த்து வைப்பதற்கு அறிவுறுத்தியது.
இதனையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர் பேரவை பிரதிநிதி களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, மாணவர்களின் நியாய மான கோரிக்கைகளான, உயர்த்தப் பட்ட பல்கலைக் கழக கட்டணத்தை திரும்பப் பெறவும், புதுச்சேரி மாண வர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கவும், பல்கலைக் கழக நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நிலுவையில் இருக்கும் போது போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய 11 மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை களை எடுத்தது.
போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்திய 11 மாண வர்களை தேர்வு எழுதவும், தொடர்ந்து கல்வி பயிலவும் தடை விதித்தது.
இத்தடை ஆணையை எதிர்த்து 11 மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்பது மிகவும் அதிகப்படியானது என்று கருதியதால் பல்கலைக்கழக நிர்வாகம் விதித்திருந்த தடையை நீக்கியதுடன், அந்த மாணவர்கள் தேர்வு எழுதவும், தொடர்ந்து கல்வி பயிலவும், பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என கடந்த 3.2.2022 அன்று உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தர வில் குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளை, 11 மாணவர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் அந்த 11 மாணவர்களில், 4 மாணவர்களை மட்டும் குறி வைத்து பழிவாங்கும் செயலில் ஈடுபட்டது. நான்கு மாணவர்களும் மேற்படிப்பு பயில முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நான்கு மாணவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில், உயர் நீதிமன்ற உத்தரவினை மதிக்காமல் செயல்படும் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் குர்மித் சிங் மற்றும் பல்கலைக்கழக பதி வாளர் முனைவர் அமரேஷ் சமந்தரயா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக் கிழமை (டிச.9) நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான அமர்வில் நடை பெற்றது.
விசாரணையின் போது பல்கலைக் கழக நிர்வாகத்தின் நட வடிக்கை ஆட்சேபனை செய்த நீதிமன்றம், பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் குர்மித் சிங் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் அமரேஷ் சமந்தரயா, ஆகிய இருவரையும் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தர விட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகி வாதாடினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > மாவட்டங்கள் > பாண்டிச்சேரி > புதுவை துணை வேந்தர்-பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவு.
புதுவை துணை வேந்தர்-பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவு.
posted on