ஏழை எளிய மக்களின் வாழ்க்கைதரம் உயர்வதற்கு கவலைப்படாத என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு, மின்துறையில் ப்ரீப்பெய்டு முறையை கொண்டு வருவதின் மூலம் கார்ப்ரேட் நிறுவனங்களின் விசுவாசியாக இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டத்தை தெரிவிக்கிறது.
புதுச்சேரிஅரசு மின்துறையை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விலை பேசி விற்பதிலேயே குறியாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக தான் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மின் கட்டண பிரீப்பெய்டு முறைக்கு தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசிய பட்டியலில் உள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்கும் வேலையை தொடர்ந்து முன்னெடுத்து வருவது பல்வேறு சந்தேகங்களை புதுச்சேரி மக்களிடத்தில் எழுந்துள்ளது. தனியார் வசம் சென்றால் மின்கட்டணம் என்பது பலமடங்கு உயரும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதனை எதிர்த்து அனைத்து பகுதி மக்களும்,மின்சார ஊழியர்களும் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ப்ரீபெய்டு முறை
இந்நிலையில் தற்போது மின்கட்டண முறையில் ப்ரீப்பெய்டு முறை கொண்டு வருவதின் மூலம் ஏழை ஏளிய மக்களை கடுமையாக பாதிக்ககூடியது. இந்ததிட்டத்தின் மூலம் மின்சாரம் என்பது எட்டா கனியாக மாறும் அபாயம் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்கள் மக்களை கொள்ளை அடிக்க வழி வகுக்கும்.
பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்த மத்திய அரசு ரூ.251.10 கோடி கடன் கொடுக்குமாம்,அதுவும் டிசம்பர் மாதத்துக்குள் 2023 இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மத்திய அரசு 15 சதவீத மானியமும், கூடுதலாக 7.5 சதவீத ஊக்கத்தொகையும் கொடுப்பாங்கலாம் மீதி தொகையை மாதந்தோறும் ஒரு மீட்டருக்கு சுமார் ரூ.80 வீதம் 90 மாதங்களுக்கு புதுச்சேரி அரசு திருப்பிச் செலுத்துமாம். இது முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் மக்களை கொள்ளை அடிக்க வழி வகுக்கும் என்பதை சுட்டுகாட்ட கடைமைப்பட்டுள்ளோம்.
இலவச மின்சாரம் ராத்தாகும்
ஏழை எளிய மக்களுக்கு தற்போது கிடைக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்னவாகும் எனத் தெரியவில்லை. விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரம் குறித்தும் பல சந்தேகங்கள் எழுகின்றன. மனிதர்களுக்குப் பதிலாக இயந்திரங்கள் வந்துவிட்டால், மின்துறையில் வேலை இழப்பு அதிகரிக்கும். சீரான கட்டணம் இல்லாமல் ப்ரிபெய்டு பில் என்பதால் திடீரென மின் கட்டணத்தை உயர்த்தும் அபாயமும் உள்ளது.
எனவே தான் என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் நயவஞ்சகமான செயல்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
நிலுவை ஊதியம் வழங்க கைவிரிக்கும் அரசு
ரேஷன் கடை ஊழியர்கள், இன்னும் பிற கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு பல மாதங்களாக நிலுவை ஊதியம் வழங்குவதற்கு பணம் இல்லை என்று கைவிரிக்கும் அரசு, புதிதாக மின் கட்டண ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்கு மட்டும் ரூ.250 கோடிக்கு மேலாக செலவாகும். இந்த செலவிற்கு மட்டும் அரசிடம் பணம் உள்ளதா ? என்ற கேள்வி எழுகிறது.
புதுச்சேரி மக்கள் மின் கட்டணத்தை முன் கூட்டியே செலுத்தி தங்களது இல்லங்களுக்கு கிடைக்கும் மின்சாரத்தை உத்திரவாதப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகியுள்ளனர். வாக்களித்த மக்களின் பணத்தை கொள்ளையடிக்க இப்படியும் ஒரு வழி ப்ரீபெய்ட் மீட்டர் அறிமுகம் இனி பணம் செலுத்தினால் மட்டுமே மின்சாரம். எனவே தான் என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி அரசு விளம்பர அரசியலையும், கார்ப்ரேட் நிறுவனங்களின் கைபாவை அரசாக உள்ளது.
இதை எதிர்த்து அனைத்து பகுதி மக்களும் போராடுவதற்கு முன்வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.
பிரிபெயிடு மீட்டர்களை நாம் எதிர்ப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:
⛔️பிரிபெயிடு மீட்டர்கள் பல பேர் செய்யும் வேலையை குறைக்கிறது.
பிரிபெய்டு மீட்டர்கள், மனிதவளம், மக்கள் தொகை குறைவாக உள்ள வெளிநாடுகளில் வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் மனித வளம் அதிகமாக இருக்கிறது.
படித்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.அவர்களின் வேலைவாய்ப்பை இது பறிக்கும். எனவே நமது நாட்டிற்கு இது பொருத்தமாக இருக்காது.
⛔️இந்த மீட்டர்கள் நம்நாட்டில் தயாரிக்கப்படவில்லை.வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நம்நாட்டிற்கு அந்நியசெலாவணி கூடுதலாக செலவாகும்.
⛔️மேலும் இதில் சிம்கார்டுகள் பொருத்தப்பட்டு ஒயர்லஸ் முறையில் செயல்படுவதால் அது தனி நபர் தகவல்களை திருடுவதாகவும் அந்த வீட்டில் உள்ளவர்களை வேவுபார்க்கும் கருவியாக செயல்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி அமெரிக்க மக்கள் இந்த மீட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
⛔️புதுச்சேரி மாநிலம் அடிக்கடி புயல் தாக்கும் இடமாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே புயல் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மொபைல் டவர்கள் வேலை செய்யாமல் போவதால் இந்த மீட்டர்கள் செயல் இழந்துவிடும் அபாயம் உள்ளது.
அந்த நேரங்களில் உடனடியாக supply Restore செய்யமுடியாமல் போகும். இதனால் மக்கள் பெருமளவு 💢பாதிப்பு அடைவார்கள்.
இச்செய்தியை தங்கள் நாளிதழில் வெளியீட்டு உதவிடுமாறு கேட்டுகொள்கிறோம்.
இவண்,
ஆர்.ராஜங்கம்,செயலாளர்,
சிபிஎம்,புதுச்சேரி மாநிலக்குழு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்திகள் > பிரதேச செயற்குழு > ஊடக அறிக்கை Press release > மின் கட்டண பிரீப்பெய்டு மீட்டர் மக்களை கொள்ளை அடிக்க புதிய வழியா?
மின் கட்டண பிரீப்பெய்டு மீட்டர் மக்களை கொள்ளை அடிக்க புதிய வழியா?
posted on