பாகூர் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
புதுவையின் பழமையான தொகுதிகளில் ஒன்று பாகூர் சட்டப்பேரவை தொகுதியாகும். புதுச்சேரி தெற்கு பகுதியில் கிராமப்புற தொகுதியாக உள்ளது. புதுச்சேரி நகரத்தில் இருந்து 20கீலோமீட்டர் தொலைவில் பாகூர்தொகுதி, கடந்த 1964-ஆம் ஆண்டில் இருந்து தனித் தொகுதியாக இருந்த வந்த நிலையில், 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.
தற்போதைய கல்வித் துறை அமைச்சர் டி.தியாகராஜன் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அமைச்சர் தொகுதி என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்த தொகுதியில் சுற்றுலா துறை அமைச்சராக இருக்கும் ராஜவேலு, அவரது சகோதரர் உத்திரவேலு, முன்னால் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
புதுவையின் நெற்கலஞ்சியம் என்ற பெயருக்கு சொந்தமான தொகுதி பாகூர். புதுச்சேரிக்கு நீர் ஆதரமாக விலங்ககூடிய மிகப்பெரிய ஏரியும் உள்ளது. இதனால் அப்பகுதி சுற்றிலும் விளைச்சல் பகுதியாக திகழ்கிறது. ஏராளமான குளங்கள், கால்வாய்கள் நிறைந்த இத் தொகுதியில் பெரும்பாலானவை விவசாய நிலங்களே.
இந்த தொகுதியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து (பகுதி), இருளன்சந்தை, பாகூர், உச்சிமேடு, பரிக்கல்பேட், குருவிநத்தம், கடவனூர், மணப்பட்டு ஆகிய பகுதிகள் வருகின்றன. இந்த தொகுதியில் மொத்தம் 27 ஆயிரத்து 812 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 12 ஆயிரத்து 973 பேர், பெண்கள் 14 ஆயிரத்து 837 பேர். பாகூர் தொகுதியில் 2 திருநங்கை வாக்காளர்கள் உள்ளனர்.
நீண்ட கால பிரச்னைகள்: விவசாயத்தை பிரதானமாக கொண்ட பாகூர் தொகுதியில் உள்ள பாகூர் ஏரி முறையாக பாசனத்துக்கு பயன்படுத்தப்படாமல் மீன்பிடிக்க பயன்படுத்துகிறது. மேலும் குளங்கள், கால்வாய்கள் தூர் வாரப்படவில்லை. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஆகியவையே இந்த தொகுதியின் நீண்ட கால பிரச்னைகளாக உள்ளன.
ரியல் எஸ்டேட்டாக மாறும் விவசாய நிலம்.
பாகூர் ஏரியை முறையாக பாராமரிக்கப்படாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்ட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கும் நிலவணிகர்கள் அதனை ரியல் எஸ்டேட்டாக மாற்றும் அவல நிலை உள்ளது. இதனை தடுக்கும் வகையில் அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று இங்குள்ள விவசயிகள் வலியுறுத்துகின்றனர். இங்குள்ள மருத்துவனையில் போதுமான மருந்துகள் இருப்பு இல்லை. மிகப்பெரிய விபத்து ஏற்பட்டால் 20கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு தான் கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. எனவே 24மணிநேரமும் இயங்ககூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும். பேரூந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று நீன்ட நாள் கோரிக்கையாக உள்ளது.