சமீபத்தில் புதுச்சேரி மாஹியில் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கன்னிபொழில் பாபுவின் புதல்வி 12 வயது அனாமிக, பாஜக தேசியகுழு உறுப்பினர் பி.கே.கிருஷ்ணதாசுக்கு எழுதிய கடிதம்……
அன்புடையீர்
என் அப்பா என்ன தவறு செய்தார் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுத்ததில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்க்கு அவர்களை திரட்டி போராடினார்.
உங்கள் அரசின் கொள்கைளால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி போராடியது தவறா?
அன்று காலை என் சகோரதனுக்கு பள்ளி சீருடை வாங்க கடைக்கு சென்றவரை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து கொன்று அடுத்த நாள் வெள்ளை துணியால் கட்டப்பட்டு செங்கொடி போத்தி பிணமாக வீட்டிற்க்கு அனுப்பி வைத்ததீர்களே நியாமா.?
எங்களுக்கு ஏற்ப்பட்ட இழப்புக்கு என்ன ஈடுகட்ட போகிறீர்கள் கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள்
பிண அரசியல் எல்லோருக்கும் இழப்பே.
எப்போதும் இது தீர்வல்ல….!
நன்றி
அனாமிகா










